சங்கரன்கோவில் சட்டமன்றத் தொகுதி வாக்காளர் பட்டியல் செம்மைப்படுத்தும் பணி ஆய்வு கூட்டம்/
தாசில்தார் பரமசிவன் ஆலோசனைப்படி நடைபெற்றது/
; சங்கரன்கோவில்: ஆக:1
சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதியில் வாக்காளர் பட்டியல் செம்மைப்படுத்தும் பணி தொடர்பான ஆலோசனை மற்றும் ஆய்வு கூட்டம் நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது மேற்படி கூட்டத்தில் வாக்காளர் பட்டியலில் உள்ள வார்டு தெரு விபரம் திருத்தம் தொடர்பாகவும் வாக்காளர் சேர்ப்பு தொடர்பான அறிவுரைகளும் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி நிலைய அலுவலர்களுக்கு தெரிவிக்கப்பட்டது இக்கூட்டம் வட்டாட்சியர் பரமசிவன், ஆலோசனை ப்படி நகராட்சி நிர்வாகமும் இணைந்து நகர்மன்ற தலைவர் உமா மகேஸ்வரி நகராட்சி ஆணையாளர் சபாநாயகம் சுகாதார அலுவலர் வெங்கட்ராமன் ஆகியோர் சார்பில் சுகாதார ஆய்வாளர் மாரிமுத்து கூட்டத்தில் கலந்து கொண்டார் இக்கூட்டத்தில் சங்கரன்கோவில் வட்டாட்சியர் திரு பரமசிவன் அவர்களின் அறிவுரையின்படி தேர்தல் துணை வட்டாட்சியர் திரு மாரியப்பன் அவர்களால் இக்கூட்டம் நடத்தப்பட்டது கூட்டத்தில் வருவாய் ஆய்வாளர் திரு முப்பிடாதி ,தேர்தல் பிரிவு அலுவலர்களான திரு சுந்தர்ராஜ் மற்றும் கணினி பதிவாளர் திருமதி பாக்கியம் ஆகியோர் கலந்து கொண்டனர்