சிவகங்கை ஆகஸ்ட்.01
சிவகங்கை மாவட்டம் அரசனூர் ஊராட்சியில் மக்களுடன் முதல்வர் எனும்
திட்டத்தை
மாவட்ட திட்ட இயக்குனர் முனைவர் சிவராமன் ஊராட்சி மன்றத் தலைவர் செல்வராணி அய்யப்பன் தலைமையில் நடைபெற்றது.
சிவகங்கை மாவட்டம் அரசனூர் ஊராட்சியில் மின்சாரம் மற்றும் வேளாண்மை மருத்துவம் ஆதிதிராவிடர் நலத்துறை உள்ளிட்ட இருபதுக்கும் மேற்பட்ட அரசுத் துறைகள் பங்கு பெறும் மக்களை தேடி அரசு இயந்திரங்கள் செயல்படும் திட்டமான மக்களுடன் முதல்வர் மாபெரும் திட்டம் நடைபெற்றது.
இதில் அரசனூர் படமாத்தூர் முடிகண்டம் பில்லூர் கண்ணாரிருப்பு மாத்தூர் கோவானூர் முளைக்குளம் உள்ளிட்ட ஊராட்சி பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
இதில் ஊராட்சி மன்றத் தலைவர்கள் செல்வராணி அய்யப்பன் மங்களம் சத்யமூர்த்தி சுமதி சரவணன் ஹேமலதா முருகன் புவனேஸ்வரி கண்ணன் இராஜேந்திரன் உள்ளிட்ட ஊராட்சி மன்றத் தலைவர்கள் மற்றும் எழுத்தர்கள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
இந்த முகாமில் மாவட்ட திட்ட இயக்குனர் முனைவர் சிவராமன் மக்களுடன் முதல்வர் திட்டம் நடைபெறும் பகுதியில் கலந்து கொண்டு ஆய்வு செய்தார் அப்போது பொதுமக்களிடம் கோரிக்கைகளை கனிவுடன் கேட்டறிந்து பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்.