கோவை ஆகஸ்ட்:01
கோவை மாவட்டம் கொடிசியா வளாகத்தில் கிரெடாய் கோயம்புத்தூர் ஃபேர் புரோ 2024 கண்காட்சி ஆகஸ்ட் 2,3,4, ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது.இந்த கண்காட்சியின் அறிமுக விழாவானது அவினாசி சாலையில் உள்ள ஒரு தனியார் ஹோட்டல் கூட்டரங்கில் தலைவர் குகன் இளங்கோ சேர்மேன் சுரேந்தர் விட்டல் ஃபேர் புரோ 2024 கண்காட்சி செயலர் எஸ் ஆர் அரவிந்த்குமார் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
இது குறித்து நிர்வாகம் சார்பில் தெரிவிக்கையில் ஃபேர்புரோ கண்காட்சியில் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா டைட்டில் பர்ட்னராகவும் ஜாகுவார் மற்றும் ரெனாகான் கோல்டன் பார்ட்னராகவும் பங்கேற்கின்றனர்.
30 க்கும் மேற்பட்ட டெவலப்பர்கள் 100 க்கும் மேற்பட்ட திட்டங்கள் நான்கு வங்கிகள் பிளாட் வில்லாக்கல் வீட்டு மனைகள் அடுக்குமாடி குடியிருப்புகள் பெருமளவில் இக்கண்காட்சியில் இடம்பெறுகின்றன மேலும் கிரெடாய் கோயம்புத்தூர் 75 க்கும் மேற்பட்ட உறுப்பினர்களை கொண்டது. அரசு கொள்கைகளையும் முறைகளுக்கும் தொழிலை பாதிக்கும் ஒழுங்கு முறைகளையும் எடுத்து செல்லும் அமைப்பாக திகழ்கின்றது என தெரிவித்தார்.