திண்டுக்கல் ஜூலை :31
மாநில அளவிலான தேக்வாண்டோ போட்டி தர்மபுரியில் கடந்த வாரம் நடைபெற்றது. அதில் திண்டுக்கல் மாவட்டம், சின்னாளப்பட்டியில் உள்ள ராஜன் உள்விளையாட்டு அரங்கில் பயிற்சி பெற்ற மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.இதில் பல்வேறு பிரிவு களில் நடந்த போட்டிகளில் கார்னீஷ், லின்சியா, தருண் ஆகியோர் கலந்து கொண்டு முதலிடம் பிடித்து தங்க பதக்கம் வென்றனர். சஹில்ஜெபா, மாத்தேஷ், தவனேஷ், அதிசயா ஆகியோர் 2-ம் – இடம் பிடித்து வெள்ளிப் பதக்கமும், இரிகரன், தங்கப்பாண்டி யன், அன்யா, வெண்மதி, தினகரன், சனா, அபூர்வா, மதுபாலா ஆகியோர் 3-ம் இடம் பிடித்து வெண்கல பதக்கங்களையும் பெற்றனர். சின்னாளப்பட்டியில் உள்ள ராஜன் உள்விளை யாட்டு அரங்கில் வெற்றி பெற்ற மாணவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக அவர்களை வாழ்த்தி பொன்னாடை அணிவித்து நினைவு பரிசு வழங்கி பாராட்டு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சர்வதேச நடுவரும், தேக்வாண்டோ சங்க மாநில துணைத் தலைவருமான மாஸ்டர்
எம்.பிரேம்நாத், திண்டுக்கல் தேக்வாண்டோ சங்க செயலா ளர் டிட்போ, துணைத்தலைவர் கண்ணன், பயற்சியாளர்கள் கலையரசன், நவீன்குமார், சஞ்சய்குமார், சரவணபாண்டி, ராஜதுரை மற்றும் பெற்றோர்கள் ஆகியோர் கலந்து
கொண்டு வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை பாராட்டி வாழ்த்தினார்கள்.