திண்டுக்கல்
ஆகஸ்ட் :1
திண்டுக்கல் அமைதி அறக்கட்டளை மனித சுரண்டலுக்கு எதிரான பெண்கள் மற்றும் குழந்தைகளை மீட்டெடுக்கும் திட்டம் சார்பாக 12 ஊராட்சிகள் சார்ந்த 30 கிராமங்களில் பணிபுரியும் தன்னார்வலர்களுக்கான அடிப்படை பயிற்சி மற்றும் திட்டமிடல் கூட்ட நிகழ்ச்சி திண்டுக்கல் அமைதி அறக்கட்டளை தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. ஒருங்கிணைப்பாளர் புவனேஸ்வரி வரவேற்புரையிலும், அமைதி அறக்கட்டளை தலைவர் ரூப பாலன் தலைமையிலும் , திட்ட மேலாளர் டாக்டர்.ஆ.சீனிவாசன் , திட்ட ஒருங்கிணைப்பாளர் பவித்ரா ஆகியோர் கருத்துரையிலும் கூட்டம் நடைபெற்றது.இக்கூட்டத்தினை ஒருங்கிணைப்பாளர்கள் திவ்யா, ரேணுகாதேவி,சங்கீதா, ராஜேஸ்வரி, முனியாண்டி ஆகியோர் சிறப்பாக ஒருங்கிணைப்பு செய்தார்கள்.ஊராட்சி மற்றும் கிராமம் சார்ந்து தன்னார்வலர்கள் செய்ய வேண்டிய பணிகள் குறித்த திட்டமிடலும் , கலந்துரையாடலும் நடைபெற்றது. இதுவரை எதிர்கொண்ட சவால்களை சமாளித்த விதம் மற்றும் செய்த சாதனைகள் குறித்தும் பேசப்பட்டது. குழந்தைகள், பெண்கள் அளவிலும், தொழிலாளர்கள் அளவிலும் செய்ய வேண்டிய சட்ட ரீதியான உதவிகள் மற்றும் பணிகள் குறித்தும் கருத்துரை வழங்கப்பட்டது. கிராம அளவில் செயல்படும் ஐந்து வகையான குழுக்களை பலப்படுத்த செய்ய வேண்டிய செயல்பாடுகள் குறித்து ஆலோசனை வழங்கப்பட்டது. மேலும் ஊராட்சி மற்றும் கிராம அளவில் நடத்தப்பட வேண்டிய சிறப்பு கூட்டங்கள் குறித்த கருத்து பகிர்வும் நடைபெற்றது. கூட்டத்தின் முடிவில் ஒருங்கிணைப்பாளர் மணிமேகலை பங்கேற்ற அனைவருக்கும் நன்றி கூறினார்.