அரியலூர், ஜூலை:30
அரியலூர் மாவட்டம்,செந்துறை ஒன்றியம், பொன்பரப்பி ஊராட்சியில் முன்னதாக வார சந்தை ஏலம் விடுவதற்காக அறிவிப்பு வெளியிடப்பட்டு. அதன்படி நேற்று ஊராட்சி மன்ற அலுவலகத்தில் ஊராட்சி மன்றத் தலைவர் சின்னபொன்னு தலைமையில் துணைத் தலைவர் வேலுமணி மற்றும் ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள் கலந்துகொண்டு செந்துறை துணை வட்டார வளர்ச்சி அலுவலர் அருள்சாமி முன்னிலையில் ஊராட்சி செயலர் தனசேகரன் அனைவரையும் வரவேற்று ஏலம் கேட்பவர்கள் கேட்கலாம் என வார சந்தை ஏலம் வாசித்தார் இதில் 5 நபர்கள் ஏல குத்தகை எடுக்க முன் தொகை 25 ஆயிரம் செலுத்தி ஊராட்சி வாரசந்தை ஏலம் விட கூட்டம் நடைபெற்றது. இதில் மருதூர் கிராமத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர் வார சந்தை ஏலம் குத்தகை ரூபாய் 2 லட்சத்து 62,000 தொகை ஏலம் பொன்பரப்பி ஊராட்சி நிர்வாகத்தின் மூலம் விடப்பட்டது. அதன்படி ஏலம் எடுத்தவர் அரசின் மதிப்பின்படி வார சந்தை குத்தகை ஏலம்
ஜி எஸ் டி சேர்த்து மொத்த தொகை ரூபாய் 2,93,440 ஏலம் போனது.
முன்னதாக கூட்டம் நடைபெற்று வந்த நிலையில் வார சந்தை நடைபெறும் இடத்தில் போதிய வசதிகள் இல்லை என குற்றச்சாட்டு எழுந்த நிலையில் ஊராட்சி ஒன்றிய துணை வட்டார வளர்ச்சி அலுவலர் நேரடி ஆய்வில் ஈடுபட்டார். அப்பொழுது அங்கு வந்த ஊர் முக்கியஸ்தர்கள் வார சந்தை இடத்தில் வசதி செய்து கொடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்ததன் அடிப்படையில் கூட்டத்தில் அலுவலர் மக்களின் கோரிக்கையை பரிசீலனை செய்து தகுந்த நடவடிக்கை எடுக்க மேல் அதிகாரியிடம் பரிந்துரைக்கிறேன் என வாக்குறுதி அளித்தார். அதன்படி அனைவரும் கலைந்து சென்றனர். வார சந்தை ஏலம் கூட்டம் எந்த ஒரு சலசலப்பும் இல்லாமல் ஏலம் விடப்பட்டது. செந்துறை காவல்துறையினர் தகுந்த பாதுகாப்பை அளித்தனர்.
அரியலூர் மாவட்ட செய்தியாளர் வினோத்குமார்