சென்னை ஜூலை 29
சென்னை, முகப்பேர் வேலம்மாள் மெட்ரிகுலேஷன் பள்ளி வளாகத்தில் மண்வாசனை கிராமிய திருவிழா காலை ஒன்பது மணி முதல் மாலை ஆறு மணி வரை நடைபெற்றது.
இவ்விழாவில் நூறு வகையான பாரம்பரிய அரிசி வகைகள், நூறு மற்றும் நெல் வகைகள், நூறு வகையான இயற்கை மூலிகைகள் திருவிழாவில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இன்றைய குழந்தைகள் செல்போன் விளையாடுவதை தவிர்க்கும் வகையில் இயற்கை சார்ந்த விளையாட்டுகள் மற்றும் நாட்டு மாடுகளை டிஸ்ப்ளே மூலம் பயன்படும் வகையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. வேர்ல்ட் யூனியன் ரெகார்ட் முப்பாளினம் கலந்த ஆண், பெண், திருநங்கைகள் சேர்ந்து 50 பேர் கலந்து கொண்டு ஒவ்வொருவரும் மூலிகை தோசைகள் 10,10 வீதம் 500 தோசைகள் செய்து காண்பித்தனர். இவ்விழாவில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியின் சிறப்பு அழைப்பாளர்கள் டாக்டர் ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ், கவிதா ராமு ஐஏஎஸ் ஸ்டார்ட் அப் நிறுவனம் சிவராஜ் ராமநாதன் விஜிபி சந்தோசம், டாக்டர் சுல்தான் அகமது இஸ்மாயில் கிராமிய பின்னணி பாடகர் வேல்முருகன் திரைப்பட நடிகர் செந்தில் வேளாண்மைச் செம்மல் கோச்சித்தர் தமிழ்நாடு இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் அரச்சலூர் செல்வம் உட்பட பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இதற்கான ஏற்பாடுகளை மண்வாசனை நிறுவனர் மேனகா சிறப்பாக நடத்தி இவ்விழாவுக்கு வருகை தந்த அனைவரையும் வரவேற்பு செய்தார்.