சென்னை, ஜூலை-29, ஜோயாலுக்காஸ் சென்னை வேளச்சேரியில் 2வது ஷோரூம் திறப்பு விழா நடை பெற்றது..
இந்த திறப்பு விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக வேளச்சேரி சட்ட மன்ற உறுப்பினர் அசன் மௌலானா…>, திரைப்பட நடிகர் பிரசாந்த் , நடிகை மடோனா செபஸ்டின், பின்னணி இசை பாடகி சுஜாதா மற்றும் முக்கிய பிரமுகர்கள், திரைப் பிரபலங்கள், ஜோயாலுக்காஸ் குழுமத்தின் தலைமை நிர்வாகிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
இத்திறப்பு விழா குறித்து ஜோயாலுக்காஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரும் தலைவருமான
ஜோய் ஆலுக்காஸ் கூறுகையில், வேளச்சேரியில் எங்களின் 2 வது ஷோருமை ஆரம்பித்ததில்
பெருமகிழ்ச்சி அடைகிறோம்,
ஷோரூமின் இந்த திறப்பு விழாவின் மூலமாக உலகை ஆபரண மயமாக்கும் எங்கள் குறிக்கோளை நோக்கி
பயணிப்பதில் பெருமகிழ்ச்சி கொள்கிறோம். சென்னையின் இதயப் பகுதியான வேளச்சேரியில் சர்வதேச தரத்திலான உட்கட்டமைப்புடன் விரிவாக்கப்பட்ட இந்த ஷோரூம், அதிநவீன வசதிகளை கொண்டுள்ளது. மிகச் சிறந்த வாடிக்கையாளர் சேவை மற்றும் அதனுடன் விருது பெற்ற மல்டி பிராண்டு ஜுவல்லரிகளையும் காட்சிப்படுத்துகிறது. அற்புதமான, மிக நுட்பமாக வடிவமைக்கப்பட்ட விதவிதமான ஆபரணங்கள் வாடிக்கையாளரின் விருப்பங்களை நிறைவேற்றுவதற்காக கொண்டுவரப்பட்டுள்ளது.
ஈடுஇணையற்ற, விதவிதமான ஜுவல்லரி கலெக்ஷன்களை அளிப்பதன் வாயிலாக ஜோயாலுக்காஸ் தனது கம்பீரமான பாரம்பரியத்தை தொடர்ந்து நிலைநிறுத்தி வருகிறது. கலாச்சார நகைகளின் ஸ்டைல் முதல் நவீன நகைகளின் ஸ்டைல் வரை விதவிதமான வகைகளில், அனைத்து விசேஷங்களுக்கும் ஏற்ற ஒரு தேர்வாக இங்கு உள்ள நகைகள் அமைந்திருக்கிறது.
அனுக்கிரஹா, டெம்பிள் ஜுவல்லரி, பிரைடு டைமண்ட்ஸ், எலிகன்ஸா, போல்கி டைமண்ட்ஸ், யுவா, எவ்ரிடே ஜுவல்லரி, அபூர்வா, ஆண்ட்டிக் கலெக்ஷன், ரத்னா, ப்ரஸ்சியஸ் ஸ்டோன் ஜுவல்லரி என்று பல்வேறு விதமான பிராண்டுகள் கொண்ட ஆபரண மாளிகையாக இந்த ஷோரூம் ஜொலிக்கிறது தங்கம் வைரம் என்று அனைத்து விதமான ஆபரணங்களிலும் 2024-ன் புத்தம் புதிய டிசைன்களின் வரவுகளும் ஷோரூமை அலங்கரிக்கிறதுஎன்று தெரிவித்தார்.