கருங்கல், ஜூலை-29.
குமரி மாவட்டம் ஆற்றூர் மரியா ஆயுர்வேத மருத்துவ கல்லூரி துணை பேராசிரியை டாக்டர் நிசி வில்சன் எழுதிய இருமல் நோய் தீர்வுகள் 100 என்னும் மருத்துவ நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது.
தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சரின் முகாம் அலுவலகத்தில் நடந்த விழாவிற்கு அமைச்சர் மனோ தங்கராஜ் தலைமை தாங்கி நூலை வெளியிட்டார். குமரி மேற்கு மாவட்ட திமுக அவைத்தலைவர் மரிய சிசுகுமார் முதல் நூலை பெற்றுக்கொண்டார்.
நிகழ்ச்சியில் வின்சி ஆஸ்ரம மருத்துவர் வில்சன், ரெஜிஸ்லாஸ், தமிழ்நாடு மீன்தொழிலாளர் யூனியன் செயலாளர் அலக்சாண்டர், ஜெயக்குமார், ஜெஸ்டின் உட்பட பலர் கலந்துகொண்டனர்.