நாகர்கோவில் ஜூலை 28
கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையின் 149-வது பிறந்த நாளை முன்னிட்டு நாகர்கோவில் கவிமணி அரசு மேல்நிலைப்பள்ளியில் உள்ள அவரது சிலைக்கு முன்னாள் அமைச்சரும், கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினருமான என்.தளவாய்சுந்தரம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு புத்தகப்பை மற்றும் மரக்கன்றுகளை பள்ளி தலைமை ஆசிரியரிடம் வழங்கினார்.
கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை அவர்கள் குழந்தை கவிஞர் என்று அழைக்கப்பட்டு பாராட்டு பெற்றவர். குழந்தைகளுக்காக பல்வேறு கவிதைகளை தந்தவர். தமிழ் அறிஞர், தமிழ் மொழிக்கு ஈடில்லா தமிழ் தொண்டாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியை கவிதா, கவிமணி நற்பணி மன்றத் தலைவர் டாக்டர் நாகேந்திரன், கழக நிர்வாகிகள் சிவசெல்வராஜன், ராஜன், சந்துரு, பசிலியான் நசரேத், தாணுபிள்ளை, சேவியர் மனோகரன், சுகுமாரன், சாந்தினிபகவதியப்பன், பார்வதி, வழக்கறிஞர் ஜெயகோபால், வழக்கறிஞர் முருகேஷ்வரன், ஸ்ரீலிஜா, அக்சயாகண்ணன், கோபாலசுப்பிரமணியன், வீரபுத்திரன், மகராஜபிள்ளை, பொன் சுந்தர்நாத், ஜெஸீம், பொன்.சேகர், ரபீக், ராஜாராம், சந்திரன், பூங்கா கண்ணன், ஜெயசீலன், வடிவை ஹரி, ஞாலம் ஜெகதீஸ், எஸ்.எம்.பிள்ளை, ரவிந்திரவர்சன், துபாய் மாஹின் உட்பட பலர் கலந்து கொண்டனர்.