அரியலூர், ஜூலை:28
அரியலூர் மாவட்ட நகரில் அண்ணா சிலை அருகில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர்,தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆணையின்படி தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் அவர்களின்
வழிகாட்டுதலின்படியும்,
அரியலூர் மாவட்ட திமுக சார்பில்,மத்திய (பட்ஜெட்டில்) நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாட்டை வஞ்சித்த பாஜக தலைமையிலான மத்திய அரசை கண்டித்து “கண்டன ஆர்ப்பாட்டம்” திமுக மாவட்ட துணை செயலாளர் சந்திரசேகரன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொள்கைபரப்பு இணைச் செயலாளர் முனைவர் இரா.தி.சபாபதி மோகன், திராவிட முன்னேற்றக் கழகத்தின் சட்டதிட்ட திருத்தக்ககுழு இணைச்செயலாளர் சுபா.சந்திரசேகர், திராவிட முன்னேற்ற கழகத்தின் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன், திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொள்கைபரப்பு துணைச் செயலாளர் ச.அ.பெருநற்கிள்ளி ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள்.
இதில் திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் எம்.பி.பாலசுப்பிரமணியன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாளை து.அமரமூர்த்தி மற்றும் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் கழக, கிளைக் கழக நிர்வாகிகள், அனைத்து அணி நிர்வாகிகள், பொதுமக்கள் பெருந்திரளாக கலந்துகொண்டனர்.
அரியலூர் மாவட்ட செய்தியாளர் வினோத்குமார்