கிருஷ்ணகிரி- ஜூலை-27-கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை உள்வட்டம், எம்.வெள்ளாப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த LPG டேங்கர் லாரி ஓட்டுநர் .முருகன் என்பவர் கடந்த 16.07.2024 அன்று கர்நாடகா மாநிலம், சிரூரு பகுதியில் காட்டாற்று வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்ததையடுத்து, அவரது மனைவி .செவ்வந்தி அவர்களிடம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.3 இலட்சத்திற்கான காசோலையை மாவட்ட ஆட்சித்தலைவர் .கே.எம்.சரயு ., அவர்கள், பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் .தே.மதியழகன் அவர்கள் முன்னிலையில் வழங்கி, ஆறுதல் தெரிவித்தார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை உள்வட்டம், எம்.வெள்ளாப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த .முருகன் என்பவர் கடந்த 16.07.2024 அன்று LPG டேங்கர் லாரியில் ஓட்டுநராக சென்றபோது கர்நாடகா மாநிலம், வடகன்னட மாவட்டம், அங்கோலா வட்டம், சிரூரு பகுதியில் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் காட்டாற்று வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்தார். இந்த விபத்தில் உயிரிழந்த லாரி ஓட்டுநர் .முருகன் அவர்களின் குடும்பத்தினருக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆறுதல் தெரிவித்ததோடு, முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.3 இலட்சம் வழங்க 25.07.2024 அன்று உத்தரவிட்டார்.
அதனைத்தொடர்ந்து, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள், பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் லாரி ஓட்டுநரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி, அவரது மனைவி .செவ்வந்தி அவர்களிடம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.3 இலட்சத்திற்கான காசோலையை வழங்கினார்கள். மறைந்த முருகன் அவர்களுக்கு திவ்யஸ்ரீ என்கிற மகளும், மேகன் என்ற மகனும் உள்ளனர்.
இந்நிகழ்வில், மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் .ரஜினிசெல்வம், ஊத்தங்கரை ஒன்றிய குழு தலைவர் .உஷாராணி குமரேசன், ஊத்தங்கரை பேரூராட்சி தலைவர் .அமானுல்லா, மாநில மகளிர் ஆணைய குழு உறுப்பினர் .மாலதி, மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் .கதிரவன், ஊத்தங்கரை வட்டாட்சியர் .திருமால் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் உடனிருந்தனர்.