மதுரை ஜூலை 25,
ஆசிரியராக மாறிய மதுரை ஆட்சியர்
மதுரை மாவட்டம் திருமங்கலம் கள்ளிக்குடி ஊராட்சி ஒன்றியம் தென்மநல்லூர் நடுநிலைப்பள்ளியில் மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் சங்கீதா ஆய்வு செய்தார். அப்போது பள்ளி மாணவிகளிடம் கல்வி கற்றல் கற்பித்தல் குறித்து கேட்டறிந்த ஆட்சியர் மாணவர்களிடம் பாடம் சார்ந்த சில வினாக்களை கேள்விகளாக எழுப்பி மாணவருக்கு ஷாக் கொடுத்தார், இருப்பினும் மாணவர்கள் சளைக்காமல் ஆட்சியருக்கு பதில் அளிக்க தயங்கிய நிலையில் ஆட்சரியரே விடையை சொல்லி கொடுத்து மாணவர்களை பாராட்டினார். இதனால் மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்த நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர் ஆசிரியர்கள் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.