திண்டுக்கல் ஜூலை: 24
திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அருகே உள்ள தண்ணீர் பந்தம்பட்டி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் உலக போதை எதிர்ப்பு தினமும் மற்றும் மாவட்ட அளவிலான போதை விழிப்புணர்வு கருத்தரங்கமும், பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் சிறந்த சமூக தலைவர்களுக்கு விருது வழங்கும் விழா நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு திட்ட ஒருங்கிணைப்பாளர் பவித்ரா வரவேற்புரை ஆற்றினார். அமைதி அறக்கட்டளை தலைவர் ரூப பாலன் தலைமை உரையாற்றினார். அரசு கலை அறிவியல் கல்லூரி முதல்வர் ரேவதி மற்றும் ஆங்கில துறை பேராசிரியர் சுந்தர்ராஜ் முன்னிலை வகித்தனர். மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சத்யநாராயணன், தொழிலாளர் நலத்துறை அலுவலர் வெங்கடாசலம், வடமதுரை அனைத்து மகளிர் நிலைய காவல் ஆய்வாளர் வசந்தா ஆகியோர்கள் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து சிறப்புரை ஆற்றினார்கள். போதை இல்லாபாரத இயக்கம் தமிழ்நாடு மாநில ஒருங்கிணைப்பாளர் பழனியா பிள்ளை மற்றும் குழந்தைகள் மற்றும் பெண்கள் பாதுகாப்பு குழு உறுப்பினர் மற்றும் அமைதி அறக்கட்டளை திட்ட மேலாளர் சீனிவாசன் ஆகியோர் கருத்துரை வழங்கினார்கள். மேலும் தேவநாயக்கன்பட்டி தலைமை ஆசிரியர் ஜீவா கிறிஸ்டி, பேர்ட்ஸ் உண்டு உறைவிட பள்ளி தாளாளர் சின்னழகர், புளியமரத்து கோட்டை தலைமை ஆசிரியர் தேன் மலர்விழி, உசிலம்பட்டி உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் தேவி பரமேஸ்வரி , விருதலைபட்டி உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சடையாண்டி, அமைதி தொழில் பயிற்சி நிறுவனம் முதல்வர் மெர்சி பால்பாஸ்கர், அமைதி கல்வியியல் கல்லூரி முதல்வர் பிரேமா, ஸ்ரீ சாஸ்தா டுடோரியல் காலேஜ் முதல்வர் செந்தில்குமார் மற்றும் அழகாபுரி நடுநிலைப் பள்ளி ஆசிரியை விஜயகாந்தி ஆகியோர் மற்றும் பள்ளி ஆசிரியர்களும் சிறப்பு பங்கேற்பாளர்களாக கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியினை ஒருங்கிணைப்பாளர் திவ்யா சிறப்பாக தொகுத்து வழங்கினார்.
நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர்கள் கோகிலா, முனியாண்டி, சங்கீதா, புவனேஸ்வரி, ரேணுகாதேவி, ராஜேஸ்வரி ஆகியோர்கள் சிறப்பாக ஒருங்கிணைப்பு செய்து இருந்தனர். பள்ளி மற்றும் கல்லூரி அளவில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு விருதுகளும், பாராட்டு சான்றிதழ்களும், பரிசுகளும் வழங்கப்பட்டன. இதில் சிறப்பாக செயலாற்றிய துறை சார் அலுவலர்கள், பள்ளி தலைமை ஆசிரியர்கள் ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் தன்னார்வலர்களுக்கும் பாராட்டி பரிசுகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியின் போது போதை ஒழிப்பு தொடர்பான உறுதிமொழி எடுக்கப்பட்டது. நிகழ்ச்சியின் முடிவில் ஒருங்கிணைப்பாளர் மணிமேகலை நன்றி கூறினார்.