தஞ்சாவூர் ஜூலை 24.
தஞ்சாவூர்மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சி துறை ஊழியர்கள் சங்கம் சிஐடியு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதற்கு மாவட்ட செயலர் இமானுவேல் தலைமை தாங்கி னார். மாநில குழு உறுப்பினர் கலியமூர்த்தி ,சி ஐ டி யு மாவட்ட துணை செயலர் அன்பு, மாவட்ட பொருளாளர் மணிவேல் ,மாவட்ட துணைத் தலைவர்கள் கோவிந்தராஜு, ஜீவபாரதி, பொருளாளர் பேர் நீதி ஆழ்வார், ஆகியோர் முன்னிலை வகித்தனர் சி ஐ டி யு மாவட்ட செயலர் ஜெயபால் கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன உரையாற்றி னார்.
ஆர்ப்பாட்டத்தில் குறைந்தபட்ச கூலி சட்டத்தின் படி சென்னை உயர் நீதி மன்ற உத்திரவின்படி மேல்நிலைத் தேக்க தொட்டி இயக்குபவர்களுக்கு மாத ஊதியம் ரூபாய் 14 ஆயிரத்து 593 ,தூய்மை பணியாளர்களுக்கு மாத ஊதியம் ரூபாய்12 ஆயிரத்து 593 வழங்க வேண்டும். ஊராட்சியில் காலியாக உள்ள பல்லாயிரக்கணக்கான காலியிடங்களை நிரப்ப தமிழக அரசின் தடை ஆணையை உத்தர வை ரத்து செய்ய வேண்டும்.
தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று காலங்களில் முன்கள பணியாளர்களாக பணி செய்த ஊராட்சி பணியாளர்களுக்கு அரசு அறிவித்த 3 மாத ஊக்கத்தொகை ரூபாய் 15 ஆயிரத்தை வழங்க வேண்டும். தூய்மை பணியாளர் கள், டெங்கு கொசு ஒழிப்பு தொழிலாளர்கள், மேல்நிலை தேக்க தொட்டி இயக்குபவர்களை யும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.