தஞ்சாவூர் ஜூலை 24.
தஞ்சாவூர் மாவட்டத்தில் அனைத்து துறை வளர்ச்சி திட்ட பணிகள் பேரிடர் முன்னேற்பாடு குறித்து உயர்மட்ட அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
ஆய்வுக் கூட்டத்திற்கு மாவட்ட கண்காணிப்பு அலுவலரும் ஆதிதிராவிடர் நலஇயக்குநருமான டி. ஆனந்த் இஆப அவர்கள் தலைமையில் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரியங்கா பங்கஜம் முன்னிலையில் நடைபெற்றது.
இது தொடர்பாக மாவட்ட கண்காணிப்பு அலுவலர் டி. ஆனந்த் தெரிவித்ததாவது:
ஆய்வுக்கூட்டத்தில் மக்களுடன் முதல்வர் உங்களைத் தேடி உங்கள் ஊரில், நமக்கு நாமே திட்டம், காலை சிற்றுண்டி திட்டம், சமத்துவ மயானம், கலைஞர் அனைத்து கிராம ஒருங்கிணைந்தவேளாண் வளர்ச்சித் திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி குறுவை சாகுபடி தொடர்பான பணிகள், தஞ்சாவூர், கும்பகோணம் மாநகராட்சியில் அம்ரூத்திட்டம் ,குடி மராமத்து பணிகள், எண்ணும் எழுத்தும் இயக்கம், மக்கள் தேடி மருத்துவம்,இல்லம் தேடி கல்வி நான் முதல்வன் திட்டம், உங்கள் தொகுதியில் முதலமைச்சர் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் குறித்த செயல்பாடுகள், பருவ மழை முன்னெச்சரிக்கை பணிகள், பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாடுகள், தூய்மை பாரத இயக்கம், திடக்கழிவு மேலாண்மை திட்டம் அரசால் வழங்கப்படும் இலவச வீட்டு மனை பட்டா வழங்குதல், மாணவர்களுக்கு ஜாதி சான்று வருமான சான்று இருப்பிட சான்று மிதி வண்டி வழங்கும் பணி, ஸ்மார்ட் வகுப்புகள், இ-சேவை மையம் மூலம் பெறப்பட்ட மனுக்களுக்கு சான்றிதழ்கள் தொடர்பாகவும் இக்கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டது
மேலும் நிலுவையில் உள்ள அனைத்து திட்ட பணிகளையும் விரைவாக, தரமாக முடித்து முடித்திட சம்பந்தப்பட்ட அலுவலர் களுக்கு உத்திரவிடப்பட்டுள்ளது என மாவட்ட கண்காணிப்பு அலுவலரும் மற்றும் ஆதிதிராவிட நலத்துறை இயக்குனர் ஆனந்த் தெரிவித்தார்.
கூட்டத்தில் உதவி ஆட்சி உத்கர்ஷ் குமார் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பாலகணேஷ் வேளாண்மை இணை இயக்குனர் சுஜாதா நேர்முக உதவியாளர் (விவசாயம் )ஜெயசீலன், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணை பதிவாளர் தமிழ் நங்கை, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு )வேலு ,ஊரக வளர்ச்சி முகமை செயற் பொறியாளர் செல்வராஜ், நீர்வளத் துறை செயற்பொறியாளர் இளங்கோ தீலிபன் அய்யம்பெருமாள் உதவி செயற்பொறியாளர் சிவகுமார் உதவி இயக்குனர் (ஊராட்சி) சதாசிவம் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.