சிவகங்கை ஜூலை :24
சிவகங்கை அரண்மனை வாசல் அருகே திமுக அரசைக் கண்டித்து அதிமுக கண்டன ஆர்ப்பாட்டத்தை நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தின் போது மாவட்ட அளவிலான அதிமுக நிர்வாகிகள் மின் கட்டண உயர்வை கண்டிக்கும் வகையில் தங்கள் கைகளில் அரிக்கேன் விளக்குகளை ஏந்தியவாறு கோஷங்கள் எழுப்பினர்.
அப்போது
அதிமுக மாவட்டச் செயலாளர் பி.ஆர். செந்தில்நாதன் பேசியதாவது : திமுக ஆட்சிக்கு வந்த மூன்று ஆண்டுகளில் மூன்று முறை மின் கட்டணத்தை உயர்த்தி இருப்பது மிகுந்த வேதனை அளிக்கிறது. இதனால் சாமான்ய மக்கள் மிகுந்த கஷ்டத்திற்குள் தள்ளப்பட்டுள்ளார்கள். தேர்தலின் போது மின் கட்டணத்தை வெகுவாக குறைப்போம் என்று வாக்குறுதியில் சொன்னவர்கள் அதற்கு எதிர்மாறாக செயல்படுவது மிகுந்த வேதனை அளிக்கிறது. இவை மட்டுமின்றி நியாய விலைக கடைகளில் பாமாயில் பருப்பு போன்றவையும் முறையாக கிடைக்கவில்லை.
பருப்பு பாமாயில் போன்றவற்றை நிறுத்துவதற்கும் முயற்சிகள் நடந்து வருகிறது. தமிழக அரசியலில் முதல்வர் அவரது மகன் அவரது சகோதரி அவரது மருமகன் என்று பட்டியல் மட்டும் நீண்டு போகிறதே தவிர மக்களுக்கான நலத்திட்டங்கள் எதுவும் விரிவாக இல்லை. எதற்கெடுத்தாலும் போராட்டம் நடத்தும் கம்யூனிஸ்ட் கட்சிகளும் காங்கிரஸ் கட்சியும் விடுதலைச் சிறுத்தை அமைப்புகளும் மின் கட்டண உயர்விற்கு எதிர்ப்புப் தெரிவிக்காமல் இருப்பது மக்கள் விரோத போக்கை காட்டுகிறது. தமிழகத்தில் கொலைகளும் கொள்ளைகளும் போதைப் பொருட்களின் விநியோகமும் அதிக அளவில் நடந்து வருகிறது.
சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது எனப் பேசினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் பாஸ்கரன் கட்சியின் மூத்த நிர்வாகிகளான கே .கே. உமாதேவன் இளங்கோவன் கற்பகம் இளங்கோ ஒன்றியச் செயலாளர்கள் கோபி ஸ்டீபன் அருள்சாமி உள்பட மாவட்ட அளவிலான சுமார் 500 க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.