சென்னை, ஜூலை – 24, ஜப்பான் நாட்டைச் சேர்ந்த முன்னணி நிறுவனங்களின் தொழிலதிபர்கள், இந்தியாவில் குறிப்பாக தமிழ் நாட்டில் தொழில் முனைவோர்களுடன் இணைந்து இரு நாட்டு தொழில் மற்றும் வர்த்தகம் செய்வதற்கான பரஸ்பர புரிந்துணர்வு ஒப்பந்ததிந்தான கலந்தாய்வு கூட்டம் வருகின்ற ஆகஸ்ட் மாதம் 23 ஆம் தேதி சென்னையில் நடைபெறவுள்ளது.
இந்த கலந்தாய்வு கூட்டம் தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்ட ஜப்பானிய தொழிலதிபர் ஆன்மீக ஆசான் கோபால் பிள்ளை சுப்பிரமணியம் தலைமையில் 60க்கும் மேற்பட்ட ஜப்பான் நாட்டு தொழிலதிபர்களும் , 100க்கும் மேற்பட்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த தொழிலதிபர்களும் கலந்து கொள்கின்றனர்.
இதில் துறை சார்ந்த அமைச்சர்களும் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கு பெற உள்ளனர்.
இந்நிகழ்ச்சியில் விவசாயம் ,மருத்துவம் , மற்றும் பல தொழில் துறைகளைப் பற்றியும், முதலீடு செய்வதற்கான கலந்தாய்வு நடக்க உள்ளது.