திண்டுக்கல் ஜூலை: 26
திண்டுக்கல் அரிமா சங்கம் சார்பாக 6 சேவைகள் நிறைவேற்றும் விழா ஸ்ரீராமபுரம் ஹாஜி முஸ்தபா மேல்நிலைப் பள்ளியில் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில் பள்ளி மாணவ, மாணவிகள் அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்கு சிறப்பு விருந்தினராக டாக்டர்.நாட்டாண்மை என்.எம்.பி.காஜாமைதீன் கலந்து கொண்டு கேடயம் வழங்கினார். மேலும் குழந்தைகளுக்கு புற்றுநோய் கண்டறியும் பரிசோதனை, பொதுமக்களுக்கு சர்க்கரை நோய் கண்டறிதல், கண் சிகிச்சை முகாம் , அன்னதானம், மரக்கன்றுகள் நடுதல் ஆகியவை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து பள்ளியில் மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்நிகழ்வில் டாக்டர்.ஆர்.குப்புசாமி , ஹாஜி முஸ்தபா மேல்நிலைப்பள்ளி தாளாளர் எஸ்.அஹமதுசமீம், பள்ளியின் முதல்வர் சி.அய்யனார், சர்க்கரை நோய் மருத்துவர் டாக்டர்.எம்.பாலமுருகன், காங்கிரஸ் நிர்வாகிகள் ஜோதிராமலிங்கம், சர்மா, தாஸ் மற்றும் ஆசிரியைகள் ஏராளமான பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.