மூவேந்தர் மருதம் முன்னேற்ற கழகத்தினர் மாஞ் சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக. கோவில்பட்டியில் இருந்து நெல்லை தாமிரபரணி ஆற்றுக்கு வாகனங்களில் புறப் பட்டனர். வரும் வழியில் கோவில்பட்டி – எட்டயபுரம் சாலையில் உள்ள வீரன் சுந்தரலிங்கனார் சிலைக்கு மூவேந்தர் மருதம் முன்னேற்றக் கழகத்தினர் நிறுவன தலைவர் பா.அன்புராஜ் தலைமையில் மாலையணிவித்து மரியாதை செலுத் தினர்.
இதில் மாநில பொதுச் செயலாளர் செல்லப்பா, தென்மண்டல மகளிர் அணி செயலாளர் சுப்புலட்சுமி, தூத்துக்குடி மாவட்ட செயலாளர் பேச்சிமுத்து, தூத்துக்குடி மாவட்ட இளைஞரணி செயலாளர் பால் துரை, மாநில கொள்கை பரப்பு செயலாளர் முனியசாமி, மாநில துணை பொதுச்செயலாளர் பொன்னுச்சாமி, மாநில இளைஞரணி செயலாளர்கள் பிரகாஷ் தேவேந்திரர், மாவட்ட மகளிர் அணி துணைச் செயலாளர் அன்னலட்சுமி ஒன்றிய மகளிர் அணி முத்துலட்சுமி, ஒன்றிய மகளிர் அணி துணை செயலாளர் மணி, கோவில்பட்டி மேற்கு ஒன்றிய செயலாளர் பொன்மாடசாமி ,நகர இளைஞரணி கோகுல் ,ராக்கையா மகாலிங்கம், கனகராசு, உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்