நாகர்கோவில், ஜூலை – 23,
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அரசு விருந்தினர் மாளிகையில் நேற்று நடைப்பெற்ற பத்திரிக்கையாளரின் சந்திப்பின் போது வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் , பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் ஆகியோர் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில்-
கன்னியாகுமரி மாவட்ட அரசு ரப்பர் கழகத்தில் பணிபுரியும் ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளம் தொடர்பாக இன்று பேச்சுவார்த்தை நடைப்பெற்றது. ஏற்கனவே வனத்துறை மற்றும் அரசு ரப்பர் கழகம் சார்ந்த அலுவலர்கள், வெவ்வேறு தொழிற்சங்கம் சார்ந்த செயலாளர்கள் மற்றும் உறுப்பினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி குறைந்தபட்சம் ஊதியமாக இருந்த ரூபாய்.585 ஊதியத்தினை ரூபாய்.45 உயர்த்தி நாள் ஒன்றுக்கு ரூபாய்.630-ஆக உயர்த்தி வழங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. இது மட்டுமல்லாமல் கூடுதலாக அரசு ரப்பர் கழகம் சார்ந்த தொழிலாளர் ஒருவருக்கு ரப்பர் பால் ஒரு கிலோவுக்கு ரூ.7.5-இல் இருந்து ரூ.8 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
மேலும், அவர்களுக்கான வீட்டு வாடகைப்படி ரூ.200 லிருந்து ரூ.225 ஆகவும், பண்டிகை முன்பணம் ரூ.10,000-இல் இருந்து ரூ.15,000 ஆயிரம் ஆகவும் உயர்த்தப்படும். அரசு ரப்பர் கழக தொழிலாளர்கள் பணியில் இருக்கும் போது மரணமடைந்தால் இறுதி சடங்குக்காக வழங்கப்படும் ரூபாய்.10,000-இல் இருந்து ரூபாய்.15,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ரப்பர் வெட்டும் தொழிலாளிகளின் உபகரணங்களை மேம்படுத்த ரூபாய்.80-இல் இருந்து ஒவ்வொரு தொழிலாளர்களுக்கும் ரூபாய்.100 ஆகவும், ரூபாய்.100- இல் இருந்து தொழிலாளர்களுக்கு ரூபாய்.120 ஆகவும்.
உயர்த்தப்பட்டுள்ளது. அதனடிப்படையில் நடைப்பெற்ற பேச்சு வார்த்தையில் பேசி சுமூகமான முடிவெடுக்கப்பட்டுள்ளது. இன்றைய பேச்சுவார்த்தையின் மூலம் சுமார் 600-க்கு மேற்பட்ட பணியாளர்கள் பயன்பெறுவார்கள் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு மாண்புமிகு வனத்துறை அமைச்சர் மதிவேந்தன், பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் ஆகியோர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்கள்..
அதனைத்தொடர்ந்து. கீரிப்பாறை கோட்டம் அரசு ரப்பர் கழகத்தின் மூலம் சுமார் 65,000 ரப்பர் மரக்கன்றுகள் நடுவு செய்ததை அமைச்சர்கள் பார்வையிட்டதோடு நடுவுக்கு தயார் நிலையில் உள்ள 20,000 ரப்பர் மரங்களை விவசாயிகளின் பயன்பாட்டுக்கு கொண்டுவர அறிவுறத்தப்பட்டது. மேலும், ரப்பர் பால் வாயிலாக உற்பத்தி செய்யப்படும் அறுவை சிகிச்சை கையுறைகள், பலூண்கள், ரப்பர் பேன்டுகள், டயர்கள். ஆணுறைகள், போன்ற பல்வேறு பொருட்கள் தயாரிக்கப்படுவதை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டதோடு கழிவு ரப்பர்களிலிருந்து தயாரிக்கப்படும் உபகரணங்கள் குறித்தும் கேட்டறிந்தார்கள். மேலும், உற்பத்தி பொருட்களின் இருப்பு, தொழிலாளர்களின் வருகைப்பதிவேடு. உற்பத்திக்கான மூலப் பொருட்களின் பயன்பாடுகள் ஆகியவற்றை பார்வையிட்டும், தொழிலாளர்கள் நலன் மற்றும் கோரிக்கையினை குறித்தும் நேரடியாக கேட்டு அறிந்தார்கள். நடைப்பெற்ற நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள் பிரின்ஸ் (குளச்சல்), திரு.செ.ராஜேஷ்குமார் (கிள்ளியூர்). முனைவர்.தாரகை கத்பட் (விளவங்கோடு). நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் (துறைத்தலைவர்) முனைவர்.கதான்ஷூ குப்தா முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் மற்றும் அரசு இரப்பர் கழக தலைவர் கவுஷல், நிர்வாக இயக்குநர் (அரசு ரப்பர் கழகம்) கிருபாசங்கர், அதனைத்தொடர்ந்து, கீரிப்பாறை கோட்டம் அரசு ரப்பர் கழகத்தின் மூலம் சுமார் 65,000 ரப்பர் மரக்கன்றுகள் நடுவு செய்ததை மாண்புமிகு அமைச்சர்கள் பார்வையிட்டதோடு நடுவுக்கு தயார் நிலையில் உள்ள 20,000 ரப்பர் மரங்களை விவசாயிகளின் பயன்பாட்டுக்கு கொண்டுவர அறிவுறத்தப்பட்டது. மேலும், ரப்பர் பால் வாயிலாக உற்பத்தி செய்யப்படும் அறுவை சிகிச்சை கையுறைகள், பலூண்கள், ரப்பர் பேன்டுகள், டயர்கள், ஆணுறைகள், போன்ற பல்வேறு பொருட்கள் தயாரிக்கப்படுவதை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டதோடு கழிவு ரப்பர்களிலிருந்து தயாரிக்கப்படும் உபகரணங்கள் குறித்தும் கேட்டறிந்தார்கள். மேலும், உற்பத்தி பொருட்களின் இருப்பு, தொழிலாளர்களின் வருகைப்பதிவேடு, உற்பத்திக்கான மூலப் பொருட்களின் பயன்பாடுகள் ஆகியவற்றை பார்வையிட்டும், தொழிலாளர்கள் நலன் மற்றும் கோரிக்கையினை குறித்தும் நேரடியாக கேட்டு அறிந்தார்கள்.
அதனைத்தொடர்ந்து, கீரிப்பாறை கோட்டம் அரசு ரப்பர் கழகத்தின் மூலம் சுமார் 65,000 ரப்பர் மரக்கன்றுகள் நடுவு செய்ததை மாண்புமிகு அமைச்சர்கள் பார்வையிட்டதோடு நடுவுக்கு தயார் நிலையில் உள்ள 20,000 ரப்பர் மரங்களை விவசாயிகளின் பயன்பாட்டுக்கு கொண்டுவர அறிவுறத்தப்பட்டது. மேலும், ரப்பர் பால் வாயிலாக உற்பத்தி செய்யப்படும் அறுவை சிகிச்சை கையுறைகள், பலூண்கள், ரப்பர் பேன்டுகள், டயர்கள், ஆணுறைகள், போன்ற பல்வேறு பொருட்கள் தயாரிக்கப்படுவதை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டதோடு கழிவு ரப்பர்களிலிருந்து தயாரிக்கப்படும் உபகரணங்கள் குறித்தும் கேட்டறிந்தார்கள். மேலும், உற்பத்தி பொருட்களின் இருப்பு, தொழிலாளர்களின் வருகைப்பதிவேடு, உற்பத்திக்கான மூலப் பொருட்களின் பயன்பாடுகள் ஆகியவற்றை பார்வையிட்டும், தொழிலாளர்கள் நலன் மற்றும் கோரிக்கையினை குறித்தும் நேரடியாக கேட்டு அறிந்தார்கள்.
நடைப்பெற்ற நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள் பிரின்ஸ் (குளச்சல்), ராஜேஷ்குமார் (கிள்ளியூர்), முனைவர்.தாரகை கத்பட் (விளவங்கோடு). நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் (துறைத்தலைவர்) முனைவர்.கதான்ஷூ குப்தா. முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் மற்றும் அரசு இரப்பர் கழக தலைவர் கவுஷல், நிர்வாகஇயக்குநர் (அரசு ரப்பர் கழகம்) கிருபாசங்கர். கன்னியாகுமரி மாவட்ட வனஅலுவலர் பிரசாந்த், நாகர்கோவில் வருவாய் கோட்டாட்சியர் செல்வி.எஸ்.காளீஸ்வரி. முதுநிலை கணினி மேலாளர் கருணாநிதி, உட்பட பலர் கலந்து கொண்டனர்.