நாகர்கோவில் – ஜூலை – 23,
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கன்னியாகுமரி மாவட்ட ஒருங்கிணைந்த அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் தமிழ்நாட்டில் மின்கட்டண உயர்வு, விலைவாசி உயர்வு, மணல் கொள்ளை, ஊருக்கு ஊர் டாஸ்மார்க் விற்பனை, கொலை மற்றும் கொள்ளைகளை கண்டித்து கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட கழகச் செயலாளர் வழக்கறிஞர் ராகவன் தலைமையில், கன்னியாகுமரி மேற்கு மாவட்ட செயலாளர் ஸ்டீபன் முன்னிலையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஜெங்கின்ஸ் கண்டன பேரவை நிகழ்த்தினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் கொல்லங்கோடு நகரச் செயலாளர் ஸ்டெல்லாஸ், நாகர்கோவில் பொதுக்குழு உறுப்பினர் ஜாகிர் உசேன், மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர் அப்துல் சூகுர், ஒன்றிய செயலாளர்கள் துரைசிங்கம், சத்ய ஐசக் ஜோயல், பகுதி செயலாளர் முத்துக்குமார், நாகராஜன், தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் ஸ்ரீ குமார், மற்றும் கன்னியாகுமரி கிழக்கு மேற்கு மாவட்ட கழக மாவட்ட சார்பு அணி செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் , பொதுக்குழு உறுப்பினர்கள் பகுதி ஒன்றிய பேரூர் நகர கழகச் செயலாளர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் கழகத் தொண்டர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.