திருப்பூர் ஜூலை: 23
திருப்பூர் மாவட்டம் உணவு பாதுகாப்பு துறையின் அதிரடி நடவடிக்கை தொடர்கிறது.
தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை கலந்த பான்மசாலா,குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கும் பொருட்டு மேற்படி விற்பனை செய்யும் கடைகள் மூடி சீலிடப்படுவதோடு கடும் அபராதம் விதிக்கப்பட்டும் வருகிறது.
தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பான் மசாலா குட்கா மற்றும் நிக்கோட்டின் கலந்த புகையிலை பொருட்களின் பயன்பாட்டினை முற்றிலும் ஒழிக்கும் பொருட்டு திருப்பூர் மாவட்ட ஆட்சியர் தா.கிறிஸ்து ராஜ் அவர்களின் உத்தரவின் பேரில் உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் மரு.பா.விஜய லலிதாம்பிகை அவர்களின் தலைமையில் மாவட்டத்திலுள்ள உணவு பாதுகாப்பு அலுவலர்கள் மாவட்டம் முழுவதும் மேற்கொண்ட திடீர் ஆய்வின் போது 25 கடைகளில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்கள் விற்பனை செய்வது கண்டறியப்பட்டு. மேற்படி 25 கடைகளும் பூட்டி சீலிடப்பட்டதோடு மேற்படி கடைகளுக்கு ரூ.6,50,000 அபராதமாக விதிக்கப்பட்டும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களின் பயன்பாட்டினை முற்றிலும் ஒழிக்கும் பொருட்டு ஹான்ஸ், குட்கா ,கூல்லிப், பான் மசாலா போன்ற பொருட்கள் விற்பனை செய்வதை தடுக்கும் பொருட்டு முதல் முறையாக குட்கா விற்பனை செய்யும் குற்றத்திற்க்கு ரூ.25,000/- அபராதம் மற்றும் 15 நாட்கள் கடையை மூடி சீலிடுதல், இரண்டாம் முறை குற்றத்திற்க்காக ரூ.50,000/- அபராதம் விதிப்பதோடு 30 நாட்களுக்கு கடையை மூடி சீலிடும் நடவடிக்கையும் மற்றும் மூன்றாம் முறை குற்றத்திற்க்காக ரூ.1,00,000/- அபராதம் விதிக்கப்பட்டும், 90 நாட்களுக்கு கடையை மூடி சீலிட்டும் கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.
முக்கியமாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு அருகில், பெட்டி கடைகள் மற்றும் TASMAC பார் பெட்டி கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட பான் மசாலா குட்கா ஹான்ஸ் போன்ற நிக்கோட்டின் கலந்த புகையிலை பொருட்கள் விற்பதை கண்டறிந்து முற்றிலும் ஒழிப்பதற்கு தொடர் நடவடிக்கை மாவட்ட முழுவதும் எடுக்கப்பட்டு வருகிறது.
பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் இத்தகைய பான் மசாலா மற்றும் புகையிலை பொருட்கள் விற்கப்படுவதை உடனடியாக
9444042322 என்ற வாட்சப் எண்ணில் தொடர்பு கொண்டோ அல்லது
TN food safety consumer App என்ற செயலியில் பதிவேற்றம் செய்தோ புகார் அளிக்கலாம்.