சென்னை,
கோடம்பாக்கத்தில் ஜஸ் அன்கோ புற்றுநோய் பரிசோதனை மற்றும் சிகிச்சை மையத்தினை
தமிழக அரசின் சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன், பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் கனிமொழி என்.வி.என்.சோமு,சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் எழிலன் நாகநாதன் ஆகியோரால் துவக்கி வைத்தனர்.
அதனைத் தொடர்ந்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசுகையில் புற்றுநோய் சிகிச்சையில் தமிழக அரசின் தொலைநோக்கு திட்டங்கள் குறித்து எடுத்துரைத்தார். தொடர்ந்து கேலக்ஸி ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் தலைவர் டாக்டர் பிரகாஷ் டயா ஹேர் கீமோதெரபியின் முக்கியத்துவம் மற்றும் சிகிச்சைகள் குறித்து விளக்கி பேசினார். ஜஸ்’அன்கோ-வின் மருத்துவ குழுவினர் புற்றுநோயின் பல்வேறு படிநிலைகள் மற்றும் இதில் ஜஸ் அன்கோ-வின் பங்களிப்பு குறித்து விளக்கினர்.
முன்னதாக விழாவில் கலந்து கொண்ட அனைவரையும் ஜஸ் அன்கோ-வின் நிறுவனர் மற்றும் இயக்குனர் டாக்டர் விஜயலட்சுமி பாலகிருஷ்ணன் வரவேற்பு செய்தார்.
இந்த நிகழ்வில் ஆயிரம் விளக்கு மேற்கு தொகுதி கவுன்சிலர் நே.சிற்றரசு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு திறப்பு விழாவினை சிறப்பித்தார்.