நாகர்கோவில் ஜூலை 21
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் நகராட்சிக்குட்பட்ட இடத்தில் காமராஜர் பேருந்து நிலையம் அமைந்து வந்த நிலையில் தற்போது நவீன முறையில் பேருந்து நிலையம் புதிதாக கட்டுமான பணிகள் கடந்த ஒரு ஆண்டுகளுக்கும் மேல் நடைபெற்று வந்தது தற்போது இறுதி கட்ட பணிகள் நடைபெற்று வகிறது. இன்னும் ஒரு சில மாதங்களில் புதிதாக கட்டி முடிக்கப்பட்டு திறப்பு விழா காண உள்ள குளச்சல் காமராஜர் பேருந்து நிலையத்தின் நுழைவு வாயில் இன்னும் அமைக்க வில்லை எனவே பழையது படி பேருந்து நிலையத்திற்க்கு பெருந்தலைவர் காமராஜர்பேருந்து நிலையம் என்று பெயர் சூட்ட வேண்டுமான குளச்சல் நகர காங்கிரஸ் கட்சியினர் கோரிக்கை மனு நகர காங்கிரஸ் தலைவர் சந்திரசேகர் தலைமையில் நகராட்சி ஆணையர் செந்தில்குமார் மற்றும் நகர் மன்ற தலைவர் நசீர் ஆகியோரிடம் வழங்கப்பட்டது. உடன் செயற்குழு உறுப்பினர் யூசுப் கான், மீனவ காங்கிரஸ் கிழக்கு மாவட்ட தலைவர் ஸ்டார்வின், நகர பெருளாளர் ஷாபி ஆகியோர் உடனிருந்தனர்.