அரியலூர், ஜூலை:21
அரியலூரிலுள்ள அதிமுக அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
அதிமுக மாவட்டச் செயலரும், முன்னாள் அரசு தலைமைக் கொறடாவுமான தாமரை எஸ்.ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், மின் கட்டண உயர்வைக் கண்டித்து அரியலூரில் அதிமுக சார்பில் நடத்தப்படவுள்ள ஆர்ப்பாட்டத்தில் கட்சியினர் திரளாக கலந்து கொள்வது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில், மாவட்ட அவைத் தலைவர் ஜெ.கே.என்.ராமஜெயலிங்கம், முன்னாள் மாவட்டச் செயலர் ப.இளவழகன், மாவட்ட பொருளாளர் அன்பழகன், நகரச் செயலர் பி.செந்தில், மாவட்ட அம்மா பேரவைச் செயலர் ஒ.பி.சங்கர், இணைச் செயலாளர் நா.பிரேம்குமார், அண்ணா தொழிற் சங்க மாவட்டச் செயலர் கல்லங்குறிச்சி பாஸ்கர் மற்றும் அனைத்து ஒன்றிய, கிளை கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
அரியலூர் மாவட்ட செய்தியாளர் வினோத்குமார்