ஜோஹோ நிறுவனத்துடன் கலசலிங்கம் பல்கலை
புரிந்துணர்வு ஒப்பந்தம்!
—————-
ஸ்ரீவில்லிபுத்தூர் கலசலிங்கம் பல்கலையில்
கணினி பயன்பாடு, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறை மாணவர்களுக்கு இளம் படைப்பாளிகள் திட்டத்தை செயல்படுத்த, ஜோஹோ கார்ப்பரேட் கம்பெனியுடன்
புரிந்துணர்வு ஒப்பந்தம் பல்கலைவேந்தர்
கே. ஸ்ரீதரன் தலைமையில் கையெழுத்தானது.
பல்கலை துணைவேந்தர் எஸ்.நாராயணன், ஜோஹோ கம்பெனி நிதி மேலாளர் பத்ரிநாத் ராஜன்
கையைழுத்திட்டனர்.
பதிவாளர் முனைவர் வி.வாசுதேவன் வாழ்த்துரை வழங்கினார்.
துறைத்தலைவர் கே.பாலசுப்பிரமணியம் வரவேற்றார்.
இதனைத் தொடர்ந்து இளம் படைப்பாளிகள்திட்ட
செய்முறைக் கருத்தரங்கு நடைபெற்றது .
ஜோஹோ அதிகாரிகள் அஷ்வின்,ஆதித்யா,ஸ்ருதிஆகியோர் பயிற்சி வழங்கினர்.பேராசிரியர் ஜே.பிரதீப்குமார் நன்றி கூறினார்.