தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே தனியார் பேருந்துகள் மோதிக்கொண்ட விபத்தில் 110 பேர் காயமடைந்தனர். பாலக்கோட்டில் இருந்து தனியார் பேருந்து 50க்கும் மேற்பட்ட பயணிகளுடன் மாரண்டஅள்ளிநோக்கி சென்று கொண்டிருந்தது. அதேபோல் வெள்ளி சந்தையில் இருந்து பாலக்கோடு நோக்கி தனியார் பேருந்து வந்து கொண்டிருந்தது. இந்த பேருந்தில் 50க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர்.பாலக்கோடு சர்க்கரை ஆலை அருகே பேருந்துகள் வந்து கொண்டிருந்த போது சாலையின் குறுக்கே ஆட்டோ வந்தது அதன் மீது பேருந்தை மோதாமல் இருக்க டிரைவர் பக்கவட்டில் பேருந்தை திருப்பினார். அப்போது எதிரே வந்த பேருந்தின் மீது பயங்கரமாக மோதியது இந்த விபத்தில் 110 பயணிகள் படுகாயம் அடைந்தனர். அவர்களை பொதுமக்கள் உதவியுடன் 108 ஆம்புலன்ஸ் மூலம் பாலக்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.இதில் படுகாயம்அடைந்த 22 பேரை தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மருத்துவ மனையில் உள்ளவர்களை தர்மபுரி மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி சாந்தி அவர்கள் நேரில் சென்று காயம் அடைந்தவர்களுக்கு ஆறுதல் கூறினார்.
உடனடியாக முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ஒரு லட்சம் விதம் 22 பேருக்கு 22 லட்சத்திற்கான காசோலை வழங்கினார். உடன் தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் ஆ. மணி,தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ். பி. வெங்கடேஸ்வரன் எம்
எல். ஏ. முன்னாள் அமைச்சர் முனைவர்பி.பழனி யப்பன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தடங்கம் பெ. சுப்ரமணியம்,அரசு தருமபுரி கல்லூரி மருத்துவமனை முதல்வர் அமுதவல்லி, வருவா ய்கோட்டாட்சியர் திருமதி காயத்ரி, நகர மன்ற தலைவர் திருமதி லட்சுமி நாட்டான் மாது, துணை ஆட்சியர் திருமதி தனப் பிரியா மற்றும் அரசு அலுவலர்கள், மருத்துவர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உடன் இருந்தனர்.