வேலூர்-18
திருமலை-திருப்பதி தேவஸ்தானத்தின் தமிழ்நாடு-புதுச்சேரி மாநிலங்களின் ஆலோசனைக்குழு தலைவரும், தொழிலதிபருமான சேகர்ரெட்டியின் தந்தை ஆர்.ஜெகநாதன் ரெட்டி கடந்த 11ந் தேதி உடல்நலக்குறைவால் இயற்கை எய்தினார். காட்பாடி காந்தி நகரில் உள்ள அவரது வீட்டுக்கு அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் வேலுமணி நேற்று வருகை தந்தார். அவர், அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ஜெகநாதரெட்டியின் உருவபடத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.அதைத் தொடர்ந்து தொழிலதிபர் சேகர்ரெட்டிக்கு ஆறுதல் கூறினார்.
நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி, மாவட்ட செயலாளர்கள் எஸ்.ஆர்.கே.அப்பு, த.வேலழகன், எஸ்.எம்.சுகுமார், முன்னாள் கவுன்சிலர் டி.ரிஷிக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.