கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை ஊராட்சிக்கு உட்பட்ட காரப்பட்டு தொடக்கப் பள்ளியில் உப்பாரப்பட்டி கெங்கபிராம்பட்டு கதவனி கருமாண்டபதி போன்ற ஊராட்சிகளை சேர்ந்த பொதுமக்கள் பயன்பெறும் வகையில் இன்று மக்களுடன் முதல்வர் திட்டம் ஒன்றிய பெருங்குழு தலைவர் உஷாராணி குமரேசன் தலைமையில் தொடங்கி வைக்கப்பட்டது
இந்த முகாமில் புதிய மின் இணைப்பு,மின் கட்டணம் மாற்றங்கள்,மின் இணைப்பு பெயர் மாற்றங்கள், கூடுதல் மின்சுமை கட்டணங்கள் ,
வருவாய் துறை சார்பில் பட்டா மாறுதல்,பட்டா உட்பிரிவு இணைய வழி பட்டா நில அளவீடு வாரிசு சான்றிதழ் சாதி சான்றிதழ் போன்ற சேவைகள் மனு வழங்கி 30 நாட்களுக்குள் தீர்வு காணப்படும் என்று துறை சார்ந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த முகாமில் ஊத்தங்கரை வட்டாட்சியர் திருமால் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தவமணி,பாலாஜி,மற்றும் மின்சார துறை அலுவலர்கள் மற்றும் நகராட்சி நிர்வாகிகள் திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகள் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்கள் ரமாதேவி கோவிந்தன்,சுமதிகாந்தி லிங்கம்,அருள்,வெங்கடேசன், தமிழ்ச்செல்விசெல்வகுமார் மற்றும் 1000 க்கும் மேற்பட்ட பயனாளிகள் கலந்து கொண்டு தங்கள் குறைகளை மனுக்களாக வழங்கினர்.