திருச்செந்தூர் அருகே ஆறுமுகனேரி மண்டல் சார்பாக கர்மவீரர் காமராஜர் அவர்களின் பிறந்தநாள் விழா ஆறுமுகனேரி மெயின் பஜாரில் பட்டாசுகள் வெடித்தும் பொதுமக்களுக்கு இனிப்புகள் மற்றும் மரக்கன்றுகள் வழங்கி மிகவும் சீரும் சிறப்புமாக மண்டல் தலைவர் ப.முருகேச பாண்டியன தலைமையில் நடைபெற்றது.
இவ்விழாவில் மண்டல் பொதுச் செயலாளர் வெங்கட்ஜி செயலாளர்கள் சி.செல்வக்குமார்மு.முத்துராஜ் மாவட்ட OBC அணியின் பொதுச செயலாளர் இ.தங்கபாண்டியன், மகளிரணி தலைவி க.உத்திர செல்வி உட்பட கிளைத்தலைவர்கள் பலர் கலந்து கொண்டனர்.