வத்தலக்குண்டு ஜூலை.17-
திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு ரோட்டரி சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா, அஸ்மா மஹாலில் நடைபெற்றது. இதில் டாக்டர். யூசுப் மௌலானா தலைவராகவும் பேராசிரியர் மகேந்திர பாண்டியன் செயலாளராகவும் ஆடிட்டர் விஜயன் பொருளாளராகவும் பதவியேற்று கொண்டனர். இவர்களுக்கு ரோட்டரி சங்க மூத்த நிர்வாகிகள் மீனா சுப்பையா, ரங்கநாதன் ஆகியோர் பதவிப் பிரமாணம் செய்து வைத்து வாழ்த்தினர். இதனைத் தொடர்ந்து 13 புதிய உறுப்பினர்களை அறிமுகம் செய்து வைத்து ரோட்டரி சங்கத்தின் பெருமைகள், சேவைகள் குறித்து சிறப்புரையாற்றினர்.இதில் ஒருங்கிணைப்பாளர் பவஞ்சி பட்டேல் துணை ஆளுநர் மாதவன் முன்னாள் தலைவர் பொன் ரகுநந்தன் மற்றும் பல்வேறு ஊர்களைப் சேர்ந்த ரோட்டரி சங்க நிர்வாகிகள்,சமூக ஆர்வலர்கள் பலர் கலந்து கொண்டனர்.