மதுரை ஜூலை 15,
மதுரை, தமிழ்நாடு அரசு ‘நான்முதல்வன்’ திட்டத்தின் கீழ் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் ஹச்சிஎல் நிறுவனத்துடன் இணைந்து நடத்தும் ‘பயிற்சி, மற்றும் வேலைவாய்ப்புடன் உயர்கல்வி-தேர்வுமுகாம்’
தமிழ்நாடு முதலமைச்சரின் கனவு திட்டமான நான் முதல்வன் திட்டமானது 01.03.2022 அன்று துவக்கி வைக்கப்பட்டது. இந்த மாபெரும் திறன் மேம்பாட்டிற்கான திட்டமானது இராண்டினை கடந்து வெற்றிகரமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இதன் மூலம் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பயன்பெற்று, வேலை வாய்ப்பையும் பெற்றுள்ளனர். இதன் தொடர்ச்சியாக HCL நிறுவனத்துடன் இணைந்து HCL Techbee பயிற்சி, மற்றும் வேலை வாய்ப்புடன் உயர்கல்வி-தேர்வு முகாமை நடத்த இருக்கிறது
இத்திட்டமானது மாணவர்கள் சிறுவயதிலேயே உலகளாவிய தகவல் தொழில் நுட்ப நிறுவனத்தில் தங்கள் பணியினை துவங்க வாய்ப்பளிக்கின்றது. 2023 – அல்லது 2024 கல்வியாண்டில் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தேர்ச்சி பெற்றுள்ள மாணவ மாணவிகளுக்கு பயிற்சி மற்றும் வேலைவாய்ப்புடன் உயர்கல்வி வழங்குவதற்கு “நான்முதல்வன்” திட்டத்தின் கீழ் HCL Tech தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்துடன் இணைந்து அழைக்கின்றது. முதல் முறையாக கலை பாடப்பிரிவு மாணவர்களும் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணிபுரிய அறியவாய்ப்பு ஆகையால் HCL Techbee “Early Career Program – ல் சேருபவர்கள் 1. வெற்றிகரமாக ஒரு வருடகால பயிற்சியினை முடிப்பவர்களுக்கு HCL Tech-ல் நிரந்தர வேலைவாய்ப்பை வழங்குவதோடு, அவர்களின் மேற்படிப்பை துவங்குவதற்கு வாய்ப்பினை தருகின்றது. 2. ஒரு வருடகால பயிற்சியின்போது(Internship-ன் போது IT Cohort: 7 to 12th Month and Associate 3 rd to 12th month) ஒவ்வொரு மாதமும் மாணவர்களுக்கு ஊக்கத்தொகை ரூபாய் 10,000/ HCL Tech வழங்குகின்றது. 3. பணியில் சேர்ந்தவுடனே துவக்கநிலை ஊதியமாக ஆண்டுக்கு ரூபாய் 1.70 முதல் 2.20 இலட்சம்வரை (பணிநிலைக்கு ஏற்றாற்போல்).4. HCL Tech-இல் பணிபுரிந்து கொண்டே உயர் கல்வியைத் துவங்குவதற்கு, IIIT-K, BITS Pilani, Amity, KL University @ SASTRA பல்கலைகழகங்களில் வாய்ப்பினை தருகிறது. மேலும், அவர்களின் கல்விக்கட்டணத்தில் ஒரு பகுதியை HCL Tech நிறுவனம் வழங்குகிறது. இதற்கான தகுதிகள்;1. 2023 அல்லது 2024-ம் கல்வியாண்டில் 12-ம்வகுப்பு பொதுத்தேர்வில் 75% மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும். 2. கணிதப்பாடப்பிரிவு, வணிகக்கணிதம் மாணவர்கள் கணிதப்பாடத்தில் அல்லது வணிகக்கணிதம் பாடத்தில் 60% மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும்
பயிற்சிக் கட்டணவிபரம்: – IT Cohort: INR 1,40,000/ Associate Cohort :INR 51,000/ அரசுப்பள்ளி மாணவர்களுக்குப் பயிற்சிக் கட்டணம் (IT Cohort: INR 1,00,000/ Associate Cohort :INR 51,000/) ஒருபகுதியை தமிழ்நாடு அரசுத் திறன் மேம்பாட்டுக் கழகம் வழங்கும். தேர்வு நடைபெறும் இடம் மற்றும் நாள்:
மதுரை மற்றும் சென்னையில்
15.07.2024 & 16.07.2024 கோயம்புத்தூர்
17.07.2024 & 18.07.2024 ல் நடைபெறும்.
பதிவு செய்ய link – https://registrations.hcltechbee.com/(Kindly watch the video step by step https://youtu.be/vyAPZYtYP40) மேலும்
தொடர்புக்கு சென்னை – 9003076867, 9789651825, 9944670684
மதுரை – 6382998925, 9360505531, கோயம்புத்தூர் – 9787939704, 9865535909 (For more information)
96000 56348, 89395 79849