திமுக முன்னாள் தலைவர் கருணாநிதி குறித்து அவதூறாக பேசிய நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானை கைது செய்யக்கோரி மயிலாடுதுறை மேற்கு ஒன்றிய செயலாளர் மூவலூர். மூர்த்தி காவல் நிலையத்தில் புகார் மனு.கைது செய்யவில்லை என்றால் ஆர்ப்பாட்டம் நடத்துவோம் எனவும் அறிவிப்பு.
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை தி.மு.க மேற்கு ஒன்றிய செயலாளராக இருப்பவர் மூவலூர்.மூர்த்தி இவர் இன்று மயிலாடுதுறை நகர காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது மறைந்த எங்கள் தி.மு.க முன்னாள் தலைவர் கருணாநிதியை கள்ளத்தனம் செய்தவன், காதகன், சண்டாளன், சதிகாரன் என அவதூறாக பேசி எங்கள் தலைவரின் பெயருக்கும் மரியாதைக்கும் தீங்கு விளைவிக்கும் விதமாக பத்திரிக்கையாளர்களிடம் பேசி பொதுமக்கள் மத்தியில் அவபெயரை ஏற்படுத்தியுள்ளார்எனவே சீமான் மீது உரிய நடவடிக்கை எடுத்து உடனே கைது செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். நடவடிக்கை எடுக்க தவறும் பட்சத்தில் சீமானை கண்டித்து கட்சியினரோடு இணைந்து போராட்டம் நடத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.