கன்னியாகுமரி, ஜூலை. 14-
காலையில் திமுக, மாலையில் காங்கிரஸ் ஒரே நாளில் கொட்டாரம் சந்திப்பில் திமுக காங்கிரஸ் கட்சியினர் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாட்டம்.
நாடு முழுவதும் நடைபெற்ற சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் பத்ரிநாத், மங்களூர் உட்பட அதிக தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றதையடுத்து கொட்டாரம் சந்திப்பில் காங்கிரஸ் கட்சியினர் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
நிகழ்ச்சிக்கு கொட்டாரம் பேரூர் காங்கிரஸ் தலைவர் செந்தில்குமார் தலைமை வகித்தார். முன்னாள் வட்டார தலைவர் முருகேசன் முன்னிலை வகித்தார். இதில், காங்கிரஸ் நிர்வாகிகள் நாராயணன், ராமச்சந்திரன், இசக்கிபாண்டியன், அருள் முருகன், ஆனந்த், பாலகிருஷ்ணன், ஜார்ஜ் ,ஸ்ரீ ராம் உட்பட பலர் பங்கேற்றனர்.