தருமபுரி வெண்ணாம்பட்டி ரயில்வே கேட் அருகே கே. சி. கே .மார்க்ஸ்நண்பர்கள் குழு சார்பில் இலவச மருத்துவ முகாம் கே.சி.கே. மார்க்ஸ் தலைமையில் நடைபெற்றது. இந்த இலவச மருத்துவ முகாமிற்கு கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள நாராயணா ஹிதாலயா இருதய நோய் மருத்துவர் பிரபு அவர்கள் ஒரு வயது குழந்தைகள் முதல் 20 வயது வரை உள்ளவர்கலுக்கும் உடல் மற்றும் இருதய நோய்களுக்கான இசிஜி,பிபி,இருதய துடிப்பு, இருதய நோய் காண நவீன முறையில் பரிசோதனைகள் செய்து தீர்வு காண ஆலோசனைகளையும் வழங்கினார். இந்த நிகழ்ச்சிக்கு கே. சி. கே. மார்க்ஸ் நண்பர்கள் குழுவினைச் சேர்ந்த கே.சி. கே. மார்க்ஸ், வக்கீல் வைஷாலி மார்க்ஸ், கார்த்திகேயன் மார்க்ஸ், விஜய் நர்சிங் கல்லூரி விரிவுரையாளர் சுஜாதா, டைட்டன் ஷோரூம் ரவி, ராம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.