செங்கல்பட்டு
மக்களை நாடி மக்கள் குறைகளை கேட்டு உடனுக்குடன் தீர்வு காண அரசு இயந்திரம் களத்திற்கே வரும் உங்களைத் தேடி உங்கள் ஊரில் என்ற புதிய திட்டம் மாண்புமிகு தமிழக முதல்வரால் அறிவிக்கப்பட்டுள்ளது இத்திட்டத்தினை செயலாக்கும் நோக்கில் வரும் 18/7/2024 வியாழக்கிழமை அன்று செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அவர்கள் மற்றும் அனைத்து துறை அலுவலர்களால் பல்லாவரம் வட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்கள் ஆரம்ப சுகாதார நிலையங்கள் நியாய விலை கடைகள் பள்ளிகள் மற்றும் பல்வேறு வளர்ச்சி பணிகள் ஆய்வு செய்யப்படும் இந்நிகழ்வின் ஒரு பகுதியாக மேற்படி தினத்தன்று மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை மாநகராட்சி மண்டல அலுவலகம் பல்லாவரம் அலுவலகத்தில் பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அவர்களை நேரில் சந்தித்து தங்களது மனுக்களை அளிக்கலாம் மேலும் இந்நிகழ்வின் முன்னோட்டமாக வரும் 12/7/2024 அன்று பல்லாவரம் வட்டத்தில் உள்ள குறுவட்டங்கள் முறையே பல்லாவரம் பம்மல் ஆகிய குறுவட்ட வருவாய் ஆய்வாளர்களின் அலுவலகங்களில் பொதுமக்கள் அனைத்து துறை சார்ந்த தங்களின் குறைத்தீர் மனுக்களை வழங்கலாம் என மாவட்ட நிர்வாகத்தால் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது