பளியர் இன மக்கள் வசிக்கும் பகுதியில் நடத்தப்பட்ட சிறப்பு முகாம்களில், மொத்தம் 5401 மனுக்கள் பெறப்பட்டதில், 4482 நபர்களின் கோரிக்கைகள் ஏற்கப்பட்டன. 857 மனுக்கள் பரிசீலனையில் உள்ளன.
அரசு திட்டங்களின் கீழ் பயனடைந்துள்ள பயனாளிகள்
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி…
———————————————————————
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் பொறுப்பேற்றது முதல் தமிழக மக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார்கள். எல்லோருக்கும் எல்லாம் என்ற வகையில், சமூகத்தில் ஏழ்மை நிலையில் உள்ள அனைத்து மக்களையும் பாதுகாக்கும் நோக்கில், அவர்களின் துயரை துடைக்க, பல்வேறு திட்டங்களை அறிவித்து, அந்த திட்டங்கள் அனைத்து தரப்பு மக்களையும் சென்றடையும் வகையில் சிறப்பான ஆட்சி நடத்தி வருகிறார்கள்.
திண்டுக்கல் மாவட்டத்தில் பழங்குடியின மக்களின் மேம்பாட்டிற்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக பளியர் இன மக்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்காக அரசு சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்களின் பயன்கள் அவர்களை சென்றடைவதற்கு, பல்வேறு நடடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
திண்டுக்கல் மாவட்டத்தில் திண்டுக்கல் கிழக்கு வட்டத்தில் 4 கிராமங்களில் 42 குடும்பங்களும், திண்டுக்கல் மேற்கு வட்டத்தில் 6 கிராமத்தில் 39 குடும்பங்களும், ஆத்தூர் வட்டத்தில் 1 கிராமத்தில் 2 குடும்பங்களும், ஒட்டன்சத்திரம் வட்டத்தில் 2 கிராமத்தில் 90 குடும்பங்களும், பழனி வட்டத்தில் 8 கிராமத்தில் 216 குடும்பங்களும், கொடைக்கானல் வட்டத்தில் 33 கிராமத்தில் 931 குடும்பங்களும் என மொத்தம் 1320 குடும்பங்களை சார்ந்தவர்கள் வசிக்கின்றனர்.
அரசின் நலத்திட்டங்கள் பளியர் இன மக்களை சென்றடைய தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள பளியர் இன மக்கள் வசிக்கும் ஒவ்வொரு பகுதிக்கும் துணை ஆட்சியர் தலைமையில் குழுக்கள் நியமிக்கப்பட்டு சிறப்பு முகாம்கள் 24.06.2024 அன்று முதல் 27.06.2024-ஆம் தேதி வரை நடத்தப்பட்டன.
அரசின் நலத்திட்டங்கள் அனைவருக்கும் விடுபடாமல் கிடைத்திட, பளியர் இன மக்களுக்கு சென்றடைவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன.
அதன்படி, சாதிச்சான்று கோரி 633 மனுக்கள் பெறப்பட்டதில், 548 கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. 85 மனுக்கள் பரிசீலனையில் உள்ளன.
பழங்குடியினர் நலவாரிய அட்டை கோரி 480 மனுக்கள் பெறப்பட்டதில், அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்பட்டு, சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
குடும்ப அட்டை கோரி 276 மனுக்கள் பெறப்பட்டதில், 228 நபர்களுக்கு குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டன. ஒரு நபரின் கோரிக்கை ஏற்கப்பட்டு குடும்ப அட்டை வழங்கப்படவுள்ளது. 47 மனுக்கள் பரிசீலனையில் உள்ளன. மருத்துவ காப்பீடு அட்டை கோரி 459 மனுக்கள் பெறப்பட்டதில், 153 நபர்களுக்கு மருத்துவக் காப்பீடு அட்டை வழங்கப்பட்டுள்ளது. 305 நபர்களின் கோரிக்கை ஏற்கப்பட்டு காப்பீடு அட்டை வழங்கப்படவுள்ளது. ஒரு மனு பரிசீலனையில் உள்ளது.
வாரிசு சான்று கோரி 5 மனுக்கள் பெறப்பட்டதில், அனைவருக்கும் வாரிசு சான்று வழங்கப்பட்டன. வருமானச்சான்று கோரி பெறப்பட்ட 5 மனுக்கள் பரிசீலனையில் உள்ளன. விதவைச்சான்று கோரி விண்ணப்பித்த 10 நபர்களுக்கும், ஆதரவற்ற விதவைச்சான்று கோரி விண்ணப்பித்த 8 நபர்களுக்கும் சான்றுகள் வழங்கப்பட்டன.
வங்கி கணக்கு தொடங்கிட 268 மனுக்கள் பெறப்பட்டதில், 255 நபர்களுக்கு சேமிப்பு கணக்கு தொடங்கப்பட்டு, வங்கி சேமிப்பு கணக்கு புத்தகம் வழங்கப்பட்டன. 13 நபர்களின் கோரிக்கை ஏற்கப்பட்டு வங்கி சேமிப்பு கணக்கு புத்தகம் வழங்கப்படவுள்ளது. பிறப்புச் சான்றிதழ் கோரி 359 மனுக்கள் பெறப்பட்டதில், 358 நபர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டன. ஒருவரின் கோரிக்கை ஏற்கப்பட்டு சான்றிதழ் வழங்கப்படவுள்ளது.
ஆதார் அட்டை கோரி 362 நபர்கள் விண்ணப்பித்ததில், 327 நபர்களுக்கு ஆதார் அட்டை வழங்கப்பட்டுவிட்டன. 14 நபர்களின் கோரிக்கை ஏற்கப்பட்டு, ஆதார்அட்டை வழக்கப்படவுள்ளது. 21 நபர்களின் மனுக்கள் பரிசீலனையில் உள்ளன.
வாக்காளர் அடையாள அட்டை கோரி 336 மனுக்கள் பெறப்பட்டதில், 68 நபர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்பட்டுவிட்டன. 119 நபர்களின் கோரிக்கைகள் ஏற்கப்பட்டு வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படவுள்ளது. 149 மனுக்கள் பரிசீலனையில் உள்ளன.
இலவச வீட்டுமனைப் பட்டா கோரி 359 மனுக்கள் பெறப்பட்டதில், 21 நபர்களுக்கு பட்டா வழங்கப்பட்டன, 76 நபர்களின் கோரிக்கை ஏற்கப்பட்டு பட்டா வழங்கப்படவுள்ளது. 262 மனுக்கள் பரிசீலனையில் உள்ளன. வனஉரிமைச் சான்று கோரி 478 மனுக்கள் பெறப்பட்டதில், 134 நபர்களின் கோரிக்கை ஏற்கப்பட்டு சான்று வழங்கப்படவுள்ளது. 344 மனுக்கள் பரிசீலனையில் உள்ளன.
கலைஞர் கனவு இல்லம் கோரி 240 மனுக்கள் பெறப்பட்டதில், 12 நபர்களுக்கு ஆணைகள் வழங்கப்பட்டன. 224 நபர்களின் கோரிக்கைகள் ஏற்கப்பட்டு ஆணைகள் வழங்கப்படவுள்ளன. 4 மனுக்கள் பரிசீலனையில் உள்ளன. தொகுப்பு வீடு பராமரிப்பு திட்டத்தில் 457 மனுக்கள் பெறப்பட்டதில், அனைத்து மனுக்களும் ஏற்கப்பட்டு ஆணைகள் பிறப்பிக்கப்படவுள்ளன. கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் 107 மனுக்கள் பெறப்பட்டதில், 106 மனுக்கள் ஏற்கப்பட்டு, ஆணைகள் வழங்கப்படவுள்ளன. ஒரு மனு பரிசீலனையில் உள்ளது. பிற இனங்கள் தொடர்பாக 232 மனுக்கள் பெறப்பட்டதில், 2 நபர்களின் கோரிக்கை நிறைவேற்றப்பட்டு ஆணைகள் வழங்கப்பட்டன. 230 நபர்களின் கோரிக்கைகள் ஏற்கப்பட்டு ஆணைகள் வழங்கப்படவுள்ளன.
கல்விக்கடனுதவி கோரி 42 மனுக்களும், இதர திட்டங்களின் கீழ் 25 மனுக்களும், குடிநீர், தெருவிளக்கு கோரி 48 மனுக்களும், சாலை மற்றும் பேருந்து வசதி கோரி 59 மனுக்களும், நியாயவிலைக்கடை, பொதுசுகாதார கழிப்பறை வசதி கோரி 42 மனுக்களும், அங்கன்வாடி, ஆரம்ப சுகாதார நிலையம் வசதிகள் கோரி 7 மனுக்களும், மயானம் வசதி கோரி 33 மனுக்களும், கால்நடைகள் கோரி 71 மனுக்களும் பெறப்பட்டதில், அனைத்து மனுக்களும் ஏற்கப்பட்டு ஆணைகள் பிறப்பிக்கப்படவுள்ளன.
ஆக மொத்தம் 5401 மனுக்கள் பெறப்பட்டதில், 2475 நபர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டு ஆணைகள் வழங்கப்பட்டன. 2007 நபர்களின் கோரிக்கைகள் ஏற்கப்பட்டு ஆணைகள் வழங்கப்படவுள்ளன. 857 மனுக்கள் பரிசீலனையில் உள்ளன.
சிறப்பு முகாம்கள் வாயிலாக அரசின் நலத்திட்டங்கள் பெற்று பயனடைந்த திண்டுக்கல் மேற்கு வட்டம், பன்றிமலை அருகில் பிடாரிகுளம் கிராமத்தைச் சேர்ந்த திரு.சடையாண்டி(49) அவர்கள் தெரிவித்ததாவது:-
நாங்கள் வசிக்கும் கிராமம் பின்தங்கிய பகுதியில் அமைந்துள்ளது. அரசின் திட்டங்களை பெற வேண்டுமெனில் நாங்கள் தாலுகா ஆபீசுக்கும், கலெக்டர் ஆபிசுக்கும் போகனும். அதனால எங்களுக்கு அலைச்சல் அதிகம் என்பதால நாங்க எந்தவொரு அரசின் சலுகையும் பெற முடியாமல் இருந்து வருகிறோம். இதனால் எங்களில் பலரிடம் ரேஷன் கார்டு, ஆதார் அட்டை, மருத்துவக் காப்பீடு அட்டை, ஜாதிச்சான்றிதழ் போன்ற அரசு ஆவணங்கள் சரிவர இருப்பது இல்லை.
இப்போது, அதிகாரிகள் எங்கள் வீடு தேடி வந்து, ரேஷன் கார்டு, ஆதார் அட்டை, வங்கி சேமிப்பு கணக்கு தொடங்குதல், ஜாதி சான்றிதழ் போன்றவற்றை வழங்குவதற்காக முகாம் நடத்தி, எங்களிடம் விண்ணப்பங்கள் பெற்று நடவடிக்கை மேற்கொண்டனர். வருவாய் துறையின் சார்பில் வழங்கப்படும் ஜாதி சான்றிதழ், வருவாய் சான்றிதழ், இருப்பிட சான்றிதழ், வீட்டுமனை பட்டா, குடும்ப அட்டை, பட்டா மாறுதல் ஆணை, பிறப்பு இறப்பு சான்றிதழ், ஆதார் அடையாள அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, முதியோர் ஓய்வூதியம், பிற ஓய்வூதியம் வழங்கும் திட்டங்கள், வங்கி சேமிப்பு கணக்கு, ஜாதி சான்றிதழ் போன்றவை உடனுக்கடன் வழங்கப்பட்டன. எங்களுக்கு வீடு கட்டி தருவதற்கும், வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்குவதற்கும், நாங்கள் அரசின் நலத்திட்டங்கள் பெறவும் விண்ணப்பங்கள் பெற்றுள்ளனர்.
ஏழை, எளிய மக்களின் நலனுக்காக இதுபோன்ற திட்டங்களை செயல்படுத்தி, கடைக்கோடியில் வசிக்கும் எங்களைப்போன்ற மக்களும் பயன்பெறும் வகையில் செயல்படுத்தி வரும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம், என தெரிவித்தார்.
பன்றிமலை பகுதி தங்கையார்பொரும்பு கிராமத்தைச் சேர்ந்த திரு. பெருமாள்(வயது 59) அவர்கள் தெரிவித்ததாவது:-
நாங்கள் ஜாதி சான்றிதழ், ரேஷன் கார்டு உள்ளிட்ட அரசின் திட்டங்களை பெறுவதற்கு அரசு அலுவலகங்களை தேடி அலைந்துதான் பெற வேண்டும். தற்போது, அதிகாரிகள் எங்கள் வீடு தேடி வந்து அரசின் திட்டங்களை வழங்குவதற்காக சிறப்பு முகாம்கள் நடத்தியுள்ளனர். இதன்மூலம், ஜாதிசான்றிதழ், வங்கி சேமிப்பு கணக்கு, ஆதார் அட்டை, கழிப்பறையுடன் கூடிய வீடுகள் கட்டித் தருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள எங்களிடம் மனுக்கள் பெற்றுள்ளனர். ஜாதி சான்றிதழ், வங்கி சேமிப்பு கணக்கு தொடங்கப்பட்டு உடனடியாக எங்களுக்கு வழங்கப்பட்டன. அரசின் நலத்திட்டங்கள் போன்றவைகள் உடனுக்குடன் வழங்கிட நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். ஏழை, எளிய மக்களின் நலனுக்காக இதுபோன்ற திட்டங்களை செயல்படுத்தி, வரும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம், என தெரிவித்தார்.
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் காட்டிய வழியில் செயல்பட்டு வருகின்ற மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், தமிழக மக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி, கடைக்கோடியில் வசிக்கும் மக்களும் அரசின் நலத்திட்டங்கள் வாயிலாக பயனடைந்து, வாழ்வில் வளம்பெற வேண்டும் என்ற வகையில் சிறப்பான ஆட்சி நடத்தி வருகிறார்கள் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை என்பதே பொதுமக்களின் எழுச்சிமிகு கருத்தாக உள்ளது.
வெளியீடு
அ.கொ.நாகராஜபூபதி,
செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்,
திண்டுக்கல் மாவட்டம்.