சிவகங்கை
மாவட்ட ஊராட்சி மன்றத் தலைவர்களுக்கான கலந்தாய்வு கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜீத் தலைமையில்
மாவட்ட திட்ட இயக்குனர் முனைவர் சிவராமன் மற்றும் பொது சுகாதாரப் பணிகள் மாவட்ட இணை இயக்குநர் விஜயச்சந்திரன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
இதில் சிறந்த ஊராட்சியாக பத்து ஊராட்சிகள் தேர்ந்தெடுத்து கேடயம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது.
அந்த வகையில் மானாமதுரை ஊராட்சி ஒன்றியம் வேம்பத்தூர்
ஊராட்சி சிறந்த ஊராட்சியாக தேர்வு செய்து பரிசு வழங்கப்பட்டது.
இதனை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜீத் வழங்கிட
வேம்பத்தூர் ஊராட்சி மன்றத் தலைவரும் சிவகங்கை திமுக மாவட்டக்கழக பிரதிநிதியுமான சமயத்துரை பெற்றுக்கொண்டார்.
அப்போது பேசிய ஊராட்சி மன்றத் தலைவர் சமயத்துரை எங்களது ஊராட்சியில் அதிகளவில் மக்கள் திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம் எனவும் அரசின் மக்கள் நலத்திட்டங்களை முறையாக பெற்று ஊராட்சியை ஒரு தன்னிரைவு பெற்ற ஊராட்சியாக ஆக்குவது
எங்களது லட்சியம் எனவும்
மேலும்
இது போன்று மக்கள் நலத்திட்டங்களை வழங்கிட உத்தரவு ஆணைகள் பிறப்பித்த தமிழ்நாடு முதலமைச்சர்
அவர்களுக்கும் மாவட்ட ஆட்சித்தலைவர் மாவட்ட திட்ட இயக்குனர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கும் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறினார்.