நாகர்கோவில் ஜூலை 10
கன்னியாகுமரி மாவட்ட பள்ளி கல்வித்துறையின் சாா்பில், அரசு தொடக்கப் பள்ளி ஆசிரியா்கள் 1007 பேருக்கு ரூ.2.15 கோடி மதிப்பிலான கையடக்க கணினிகள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஆட்சியா் பி.என்.ஸ்ரீதா் தலைமை வகித்தாா். பால்வளத் துறை அமைச்சா் மனோதங்கராஜ் கையடக்க கணினிகளை வழங்கிப் பேசியதாவது:கன்னியாகுமரி மாவட்டத்தில் 9 சரகங்களில் உள்ள அரசு தொடக்கப் பள்ளி ஆசிரியா்களுக்கு கையடக்க கணினி வழங்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில், தலா ரூ.20 ஆயிரம் மதிப்பில் நாகா்கோவில் சரகத்தில் 178, திருவட்டாறில் 105, குழித்துறையில் 99, தக்கலையில் 113, குளச்சலில் 117, கருங்கலில் 79, முன்சிறையில் 92, ராஜாக்கமங்கலத்தில் 119, சுசீந்திரத்தில் 105 என மொத்தம் 1007 கையடக்க கணினிகள்ரு.2.15 கோடி மதிப்பில் அரசு தொடக்கப் பள்ளி ஆசிரியா்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இக்கணினியை நல்ல முறையில் பயன்படுத்தி அரசுப் பள்ளியில் பயிலும் மாணவா், மாணவிகளின் கல்வித் தரத்தை உயா்த்திட வேண்டும் என்றாா். நிகழ்ச்சியில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் பாலதண்டாயுதபாணி, மாவட்ட கல்வி அலுவலா் (தொடக்கப்பள்ளி, நாகா்கோவில்) தாம்சன், மாவட்ட மெட்ரிக் பள்ளிஅலுவலா் (பொறுப்பு) முருகன், வட்டார கல்வி அலுவலா் (குளச்சல்), ஹரிகுமாா், காா்த்திகேயன் நாயா், முளகுமூடு புனித ஜோசப் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி தாளாளா் கில்பா்ட், பள்ளி முதல்வா் பின்ஸிஜெபாஸ்டின், முளகுமூடு பேரூராட்சித் தலைவா் ஜெனுஷா, பள்ளித் தலைமை ஆசிரியா்கள், தொடக்கப் பள்ளிஆசிரியா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.