கன்னியாகுமரி ஜூலை 8
கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட தி.மு.க இளைஞரணி சார்பில் இல்லம் தோறும் இளைஞரணி உறுப்பினர் சேர்க்கை முகாம் நேற்று கன்னியாகுமரி பேரூராட்சிக்கு உட்பட்ட புதுகிராமத்தில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு இளைஞரணி மாவட்ட துணை அமைப்பாளர் பொன் ஜான்சன் தலைமை வகித்தார்.அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய தி.மு.க செயலாளர் பாபு ,கன்னியாகுமரி பேரூராட்சி தலைவர் குமரி ஸ்டீபன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு விருந்தினராக கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் வக்கீல் மகேஷ் கலந்துகொண்டு இளைஞர் அணி உறுப்பினர் சேர்க்கை முகாமினை துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் வடக்கு ஒன்றியச் செயலாளர் மதியழகன்,கன்னியாகுமரி பேரூராட்சி துணை தலைவி ஜெனஸ் மைக்கேல்,கவுன்சிலர்கள் பூலோகராஜா,டெல்பின் ஜேக்கப்,ஆட்லின்,இக்பால்,மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் பிரிட்டோசா சாம்,விஜய் ,மாவட்ட அணிகள் துணை அமைப்பாளர்கள் அன்பழகன்,நிஷார்,இன்பராஜ் ,கிளைச் செயலாளர் ஆன்டனி,நிர்வாகிகள் தமிழ்மாறன்,அகஸ்தியலிங்கம் ,புனிதன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.