வேலூர்_08
வேலூர் அடுத்த பாலமதி மலை கிராமத்தில் உள்ள பிரசித்தி பெற்ற பாலமுருகன் கோயில் வளாகத்தில் “தினம் தினம் மரம் வளர்ப்போம்” திட்டத்தின் மூலம் பாகாயம் ரோட்டரி சங்கத்தின் சார்பில், 50 மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது. இதில், 3231 மாவட்டத்தின் உதவி ஆளுநர் ரொட்டேரியன் வெங்கடேசன், ஒன்றிய கவுன்சிலர் ஏழுமலை, ரொட்டேரியன் சாரதி மற்றும் ரோட்டரி சங்கத் தலைவர் செல்வம், செயலாளர் மோகன், பொருளாளர் புருஷோத்தமன், ரகு மற்றும் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.