திண்டுக்கல்
ஜுலை:09
குழந்தை தொழிலாளர்கள் மற்றும் வளரிளம் பருவ தொழிலாளர்களின் மீட்பு மற்றும் மறுவாழ்வு தொடர்பான சிறப்பாய்வு திண்டுக்கல்,
பழனி, ஒட்டன்சத்திரம் ,கள்ளிமந்தயம்,தொப்பம்பட்டி ,கீரனூர் ,சத்திரப்பட்டி , வேடசந்தூர், வடமதுரை, அய்யலூர், நிலக்கோட்டை, செம்பட்டி ,வத்தலகுண்டு கொடைக்கானல்,குஜிலியம்பாறை, பாளையம், கோவிலூர், சாணார்பட்டி, கோபால்பட்டி, நத்தம் ஆகிய இடங்களில் ஜூன் 1 முதல் 30 வரை மாவட்ட குழந்தை தொழிலாளர் தடுப்பு படையைச் சார்ந்த உறுப்பினர்கள் குழந்தை மற்றும் வளரிளம் பருவ தொழிலாளர்களை தடை செய்தல் மற்றும் முறைப்படுத்துதல் சட்டம் 1986-ன்படி சிறப்பாய்வுகள் வணிக நிறுவனங்கள், இருசக்கர வாகனம் பழுது நீக்கும் கடைகள், உணவகங்கள், தொழில் சார்ந்து பணிபுரியும் இடங்களில் தொழிலாளர்களை மீட்டு அவர்களின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு கல்வி மற்றும் தொழிற் கல்விணை தொடர வழிவகை செய்யப்பட்டது. தொழிலாளர் நலத்துறை, பள்ளி கல்வித்துறை, சமூக நலத்துறை, காவல்துறை மருத்துவத்துறை, குழந்தைகள் பாதுகாப்பு அலகு, அமைதி அறக்கட்டளை பிரதிநிதிகள் ஆய்வில் கலந்து கொண்டனர்.