திருப்பூர் ஜூலை:7
உணவு பாதுகாப்புத்துறை ஆணையர் அவர்களின் உத்தரவின் படி மாவட்ட ஆட்சியர்
தா. கிறிஸ்தவராஜ் அவர்களின் அறிவுறுத்தலின்பேரில் உணவு பாதுகாப்புத் துறை திருப்பூர் மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் விஜயலலிதாம்பிகை தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள். கிருஷ்ணமூர்த்தி ,
ரமேஷ் ஆகியோர் அடங்கிய குழு பல்லடம் பகுதியில் செயல்படும் பானி பூரி தயாரிக்கும் இடங்கள் மற்றும் தள்ளுவண்டி கடைகள் மற்றும் பொருட்காட்சி உள்ளிட்ட 11 இடங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
ஆய்வின்போது சுகாதார குறைபாடுகள் உள்ள நான்கு கடைகளுக்கு மொத்தம் ரூபாய் 5000 அபராதம் விதிக்கப்பட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டது மேலும் அதிக வண்ணம் கொண்ட காலிபிளவர்,
செரி பழம் மூன்று கிலோ பறிமுதல் செய்யப்பட்டு அளிக்கப்பட்டது. மேலும் சுகாதாரமான தயாரிப்பு நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வு அளிக்கப்பட்டது.
பாணி பூரி தயாரிக்க பயன்படுத்தக்கூடிய மூலப்பொருட்களான மைதா ,ரவை தரமானதாகவும் பூரி தயாரிக்க பயன்படுத்தக்கூடிய எண்ணெயை ஒரு முறை மட்டுமே பயன்படுத்த வேண்டும் எனவும் மீண்டும் மீண்டும் புதிய எண்ணெயை ஊற்றி டாப் அப் செய்யக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டது. மேலும் தயாரிப்பு மேற்கொள்ளக்கூடிய இடம் சுத்தமாகவும் சுகாதாரமாகவும் பூச்சி தொற்று இல்லாத வாறு இருக்கவும் பாணி தயாரிக்க பயன்படுத்தக்கூடிய புதினா, கொத்துமல்லி, மசாலுக்கு பயன்படுத்தக்கூடிய கிழங்கு ,வெங்காயம் தரமானதாகவும் தினமும் வாங்கி பயன்படுத்தவும் அறிவுபடுத்தப்பட்டது. மேலும் பாணி தயாரிக்க பயன்படுத்தக்கூடிய குடிநீர் தரமானதாகவும் பயன்படுத்தக்கூடிய பாத்திரங்கள் சுத்தமாக பராமரிக்கவும் பாணி தயாரிக்க செயற்கை வண்ணங்கள் பயன்படுத்தக் கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டது. மேலும் பானி பூரி மசால் தயாரிப்பவர் தன் சுத்தம் கடைபிடிக்கவும் மேலும் பானி பூரி விற்பனை செய்பவர் பூரியை உடைத்து அதில் பானியை சேர்த்து வழங்கும்பொழுது கண்டிப்பாக கையுறை, மற்றும் தலையுறை அணிய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. மேலும் பொதுமக்கள் பானி பூரி கடைகளில் பானிபூரிகளை வாங்கி உண்ணும் பொழுது விற்பனையாளரின் தன் சுத்தம் மற்றும் சுகாதார நடவடிக்கைகள் விற்பனையாளரால் மேற்கொள்ளப்படுகிறதா என்பதை தெரிந்து கொண்டு விழிப்புணர்வுடன் செயல்படவும் பொது மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. மேலும் இதுபோன்ற தொடர் நடவடிக்கைகள் அனைத்து பகுதிகளிலும் மேற்கொள்ளப்படும். என்று தெரிவிக்கப்பட்டது. பொதுமக்கள் உணவுப்பொருள் குறித்த புகார் தெரிவிக்க 9444042322 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டது.