ஈரோடு ஜூலை 7
ஈரோட்டை அடுத்த பள்ளிபாளையம் காடச்சநல்லூர் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ் வயது 54 இவருக்கு 3 மாதங்களுக்கு முன்பு புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது இதனால் ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது அவருக்கு கீமோ தெரபி சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது இந்த சூழ்நிலையில் செல்வராஜுக்கு தீவிர முதுகு வலி ஏற்பட்டு நடக்க சிரமம் ஏற்பட்டது இதனால் அவருக்கு சிடி ஸ்கேன் மற்றும் ரத்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது அப்போது அவருக்கு புற்றுநோய் முதுகெலும்புக்கு பரவி நரம்புத் தண்டை அழுத்தியுள்ளது தெரியவந்தது
தீராத வலியால் பாதிக்கப்பட்டிருந்த செல்வராஜுக்கு முழு மயக்க மருந்து செலுத்தி நரம்பு தண்டை அழுத்தி கொண்டிருந்த புற்றுநோய் கட்டியை டாக்டர்கள் முழுவதுமாக அவசர சிகிச்சை செய்து நீக்கினார் அறுவை சிகிச்சைக்கு பின்னர் அவருக்கு முதுகு வலி முற்றிலுமாக குறைந்துள்ளது மேலும் அவர் சீராக நடக்கவும் தொடங்கியுள்ளார்
மேலும் ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் 15 நாட்கள் தங்கி மருத்துவர்களால் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு தகுந்த சிகிச்சை அளிக்கப்பட்டதால் செல்வராஜ் பூரண குணமடைந்து உள்ளார்
மேலும் இந்த அறுவை சிகிச்சையை தனியார் மருத்துவமனையில் மேற்கொண்டு இருந்தால் ரூ 2 1/2 லட்சம் செலவாகி இருக்கும் ஈரோடு அரசு தலைமை மருத்துவ மனையில் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் ரூ 30 500 ஒதுக்கீடு செய்யப்பட்டு முழுமையாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது அவருக்கு தற்போது அனைத்து சிகிச்சைகளும் அளிக்கப்பட்டு நலமாக உள்ளார் முதலமைச்சர் காப்பீடு திட்டத்தின் மூலம் முதுகெலும்பு தண்டுவட நரம்பியல் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு நலமாக உள்ளமைக்கு தமிழக முதல் அமைச்சர் மு க ஸ்டாலினுக்கு செல்வராஜை நன்றி தெரிவித்தார்.