திருப்பத்தூர்:ஜூலை:6, திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் அடுத்த பலப்பல்நத்தம் பகுதியை சேர்ந்தவர் கோபால் இவரது மனைவி அனுமக்கா (82) கோபால் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்ட நிலையில் மூதாட்டி அணுமக்கா வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் இவர் கடந்த 26 ஆம் தேதி நள்ளிரவு தன்னுடைய வீட்டில் மூக்கு மற்றும் வாயில் ரத்தம் வடிந்த படி சடலமாக கிடந்துள்ளார். இந்த நிலையில் கடந்த
27 ஆம் தேதி காலை நீண்ட நேரம் ஆகியும் அனுமக்கா வெளியே வராததால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் உள்ளே சென்று பார்த்தபோது அனுமக்கா இறந்து கிடப்பதை பார்த்து ஆலங்காயம் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
தகவலின் பேரில் விரைந்து வந்த ஆலங்காயம் போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சம்பவ இடத்தில் கைரேகை மற்றும் தடவியல் நிபுணர்கள் மற்றும் வேலூர் சாரா என்ற மோப்பநாய் வரவழைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
மேலும் திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் வாணியம்பாடி துணை காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் ஆகியோர் தலைமையில் இரண்டு தனிப்படைகளை அமைத்து குற்றவாளிகளை தேடி வந்தனர்.இதில்
மூதாட்டியின் மகன் வழி பேரன் சிவகுமார் (31) என்பவர் மீது போலீசாருக்கு சந்தேகம் எழுந்த நிலையில் சிவகுமாரை காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து கிடுக்கு பிடி விசாரணை நடத்திய போது தனக்கு மதுப்பழக்கம் உள்ளதால் மது குடிக்க
அடிக்கடி மூதாட்டியிடம் பணம் செல்வதாகவும், அதற்கு மூதாட்டி பணம் தர மறுத்து விடுவார். கடந்த 26 ஆம் தேதி இரவு மது அருந்த பணம் இல்லாததால் மூதாட்டி வீட்டிற்கு சென்றபோது தூங்கிக் கொண்டிருந்த மூதாட்டி எழுந்து விட்டார். அதைப் பார்த்த சிவகுமார் மூதாட்டியின் வாய் மற்றும் மூக்கு பகுதிகளில் தன் கைகளால் அழுத்தியபோது.
மூதாட்டி மயங்கி விழுந்துள்ளார்.
அப்போது மூதாட்டி இறந்து விட்டதை பார்த்து மூதாட்டியிடம் இருந்த கம்மல், மூக்குத்தி, கால் கொலுசு ஆகியவற்றை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பித்துச் சென்று நகைகளை தனது தாயிடம் கொடுத்துள்ளதாக போலீசாரிடம் ஒப்புக்கொண்டார்.
அதன் பின்னர் போலீசார் சிவகுமாரின் தாய் மலரை கைது செய்து அவர்களிடமிருந்து மூதாட்டிடம் கொள்ளையடிக்கப்பட்ட கம்பல், மூக்குத்தி, மாட்டல், மொத்தம் ஒன்றரை சவரன் தங்க நகை மற்றும் கால் கொலுசு ஆகியவற்றை பறிமுதல் செய்து இரண்டு பேர் மீதும் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.