தஞ்சாவூர் ஜூலை 6
தஞ்சாவூர் ரயில் நிலையத்தில் தென்னக ரயில்வே பொது மேலாளர் ஆர் என் சிங் பார்வை யிட்டு ஆய்வு செய்தார்.
தஞ்சாவூர் ரயில் நிலையத்தில் அம்ரித் பாரத் திட்டத்தின்கீழ் புனர மைப்பு பணிகள் ரூபாய் 23 கோடியி ல் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பணிகளை தென்னக ரெயில் வே பொது மேலாளர் ஆர்.என். சிங் ஆய்வு செய்தார்
அப்போது நடை மேடைகளில் நடைபெறும் பணிகள் ,வாகன நிறுத்துமிடங்களில் நடைபெறும் பணிகள் உள்ளிட்ட பல்வேறு பணி களின் தன்மை, தரம் ஆகியவற்றை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். அவருக்கு தென்னக ரயில்வே முதன்மை தலைமை பொறியாளர் ராமசங்கர் கஹ்லோட், திருச்சி கோட்ட மேலாளர் அன்பழகன் உள்ளிட்டு அதிகாரிகள் விளக்கம ளித்தனர்.
தஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப்பி னர் முரசொலி ,மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி மாவட்ட செயலர் சின்னை .பாண்டியன் ,காவேரி டெல்டா ரயில் பயணிகள் சங்க செயலர் வக்கீல் ஜீவக்குமார், பாபநாசம் சரவணன் மற்றும் பட்டுக்கோட்டை நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு கோரிக்கை மனுக்களை வழங்கினர்.
தென்னக ரெயில்வே பொது மேலாளரிடம் முரசொலி எம்பி அளித்த மனுவில், தஞ்சையிலிருந் து சென்னைக்கு புதிய ரயில் இயக்க வேண்டும். திருச்சியில் இருந்து இயக்கப்படும் ரயிலை தஞ்சாவூர் வரை நீட்டிக்க வேண்டும், தஞ்சாவூர் ரயில் நிலைய நடைபா தைகளில் பயணிகள் வசதிக்காக லிப்ட் வசதி ஏற்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யினர் மற்றும் காவேரி டெல்டா ரெ யில் பயணிகள் சங்கத்தினர் வழங் கிய மனுவில் கூறியிருப்பதாவது:
பட்டுக்கோட்டை -தஞ்சாவூர் – அரியலூர் -புதுக்கோட்டை – தஞ்சா வூர் புதிய வழி தடங்கள், தஞ்சாவூர் திருச்சி இடையே புதிய பயணிகள் இயக்குவது , ஐதராபாத் – தாம்பரம் -நாகர்கோயில் சார்மினார் விரைவு ரெயிலை மெயின் லைனில் நீட்டித் து இயக்க வேண்டும். பாபநாசத்தி ல் அந்தியோதயா ரெயில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண் டும். கம்பன் விரைவு ரெயில் காரை க்குடி வரை இயக்க வேண்டும், தஞ்சாவூரில் இருந்து சென்னைக்கு காலை நேரத்தில் சூப்பர் பாஸ்ட் புதிய ரெயில் இயக்க வேண்டும், தஞ்சாவூர் நகர் விரிவடைந்து வரு வதால் ரெட்டிபாளையத்தில் புதிய ரயில் நிலையம் ஏற்படுத்த வேண் டும்.அதிகரித்து வரும் பயணிகளி ன் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு ,தஞ்சாவூரில் இருந்து திருச்சி, வேளாங்கண்ணி, கும்ப கோணம் , உள்ளிட்ட பகுதிகளுக்கு ரெயில் சேவைகளை அதிகரிக்க வேண்டும் என அதில் கூறப்பட்டிரு ந்தது. இந்த மனுக்களை பெற்றுக் கொண்ட பொது மேலாளர் உரிய நேரத்தில் பரிசீலிக்கப்படும் என தெரிவித்தார்.
தஞ்சாவூர் ரெயில்வே போலீசார் பொது மேலாளரிடம் வழங்கிய மனுவில்,புதிய கட்டிடம் கட்டித் தர வேண்டும் என கோரிக்கை விடுத் தனர். இதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என பொது மேலாளர் பதிலளித்தார்.