கோவை ஜூலை:06
கோவை அவிநாசி சாலையில் உள்ள கொடிசியா தொழிற்காட்சி வளாகத்தில் நடைபெற உள்ளது. இதுகுறித்து அக்ரி இன்டெக்ஸ் 2024 தலைவர் தினேஷ்குமார் துணைத் தலைவர் ஸ்ரீஹரி கொடிசியா தலைவர் கார்த்திகேயன் செயலாளர் யுவராஜ் ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறுகையில் இந்த வேளாண் கண்காட்சி இந்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை இந்திய சிறு குறு மற்றும் நடுத்தரத் தொழில்களுக்கான அமைச்சகம் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகம் தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழகம் புனேவில் உள்ள அகில இந்திய வேளாண் இயந்திர உற்பத்தியாளர்கள் சங்கம் ஆகிய அமைப்புகளின் ஆதரவுடன் நடைபெறவுள்ளது.
மொத்தம் 490 நிறுவனங்கள் பங்கேற்கும் இக்கண்காட்சியில் 4 லட்சம் சதுர அடி பரப்பளவில் அரங்குகள் அமைக்கப்படுகின்றன. சுமார் ஒன்றரை லட்சம் பார்வையாளர்கள் பார்வையிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. கண்காட்சியை காலை 9 மணிமுதல் மாலை 6 மணிவரை காணலாம்.
தொடக்க விழாவில் ஐசிஏஆர் செயலாளர் ஹிமான்ஷு பதக்
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக துணை வேந்தர் கீதாலட்சுமி பண்ணாரி அம்மன் குழுமம் தலைவர் பாலசுப்ரமணியம்
உள்ளிட்டோர் பங்கேற்கவுள்ளனர். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.