திருமங்கலம்
நீதிமன்ற வளாகம் அருகே
புதிய குற்றவியல் சட்டத்தை நடைமுறைப்படுத்திய மத்திய அரசைக் கண்டித்து, வழக்கறிஞர்கள் சங்க தலைவர் ராமசாமி தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த போராட்டத்தில்
புதிய சட்டத்தை நடைமுறை படுத்திய மத்திய அரசு தன்னிச்சையாக செயல்படுவதைக் கண்டித்தும் மூன்று புதிய குற்றவியல் சட்டத்தை நடைமுறைப் படுத்தியதுடன் சமஸ்கிருத மொழியில் பெயர் மாற்றம் செய்துள்ளதை கண்டித்தும் வழக்கறிஞர்களுடைய கருத்துக்களை பகிர்ந்து கொள்ளாமல் புதிய சட்டத்தை தாமாக நடைமுறைப்படுத்தியதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் இந்த உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட வழக்கறிஞர்கள் அனைவரும் உரையாற்றினர்.
மேலும் மத்திய அரசைக் கண்டித்து கண்டன கோஷமும் எழுப்பப்பட்டது
இந்நிகழ்வில் வழக்கறிஞர் சங்கச் செயலாளர் அறிவொளி மூத்த வழக்கறிஞர்கள் முன்னாள் எம்எல்ஏ சாமிநாதன் தமிழ்செல்வம் கண்ணையா அழகர்சாமி உட்பட வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகள் துணைத் தலைவர் கர்ணன் இணைச் செயலாளர் விஜய் பொருளாளர் தினேஷ் உள்ளிட்ட மூத்த வழக்கறிஞர்கள் பெண் வழக்கறிஞர்கள் பெருந்திரளாக பங்கேற்றனர்.