திருப்பூர் ஜூலை: 5
மது வணிகம் எனும் மரண வியாபாரத்தை நிறுத்தக் கோரியும் திருப்பூர் மாநகராட்சி முன்பு மாவட்ட தலைவர் நசீர்தீன்
தலைமையில் தமுமுக மாவட்ட செயலாளர் செரங்காடு அப்பாஸ் தமுமுக மாவட்ட செயலாளர் அபுசாலிஹ் தமுமுக மாவட்ட பொருளாளர் காஜா மைதீன் மற்றும் மாவட்ட துணை அணி நிர்வாகம் முன்னிலையிலும் மாபெரும் மக்கள் திறள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் தமுமுக தலைமைக் கழக பேச்சாளர் கோவை செய்யது,
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் ரவி, சமூக செயல்பாட்டாளர் திருப்பூர் சுடலை, ஆகியோர் கண்டன உரையாற்றினார்.
ஆர்ப்பாட்டத்தில் தமுமுக. மதுவின் தீமைகள் குறித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இக்கூட்டத்தில் தமுமுக மாவட்ட கிளை ஒன்றிய நிர்வாகிகள் உறுப்பினர்கள் மற்றும் பொது மக்கள் உள்பட 500க்கு மேற்பட்டவர்கள் பெருந்திரளாக கலந்து கலந்து கொண்டனர். இறுதியாக தமுமுக மாவட்ட துணை தலைவர் நசுருதீன் நன்றி கூறினார்.